பயோ கெமிஸ்ட்ரி, நானோ டெக்னாலஜி...! 

இன்றைய காலகட்டத்தில் உயிரியலுடன் தொடர்புடைய எந்தத் துறையின் ஆராய்ச்சியாக இருந்தாலும் அதில் சிறிதளவாவது நுண்ணுயிரியியல் நானோ தொழில் நுட்பம், உயிரி தொழில் நுட்பத்தை சார்ந்தே உள்ளது 
பயோ கெமிஸ்ட்ரி, நானோ டெக்னாலஜி...! 

இன்றைய காலகட்டத்தில் உயிரியலுடன் தொடர்புடைய எந்தத் துறையின் ஆராய்ச்சியாக இருந்தாலும் அதில் சிறிதளவாவது நுண்ணுயிரியியல் நானோ தொழில் நுட்பம், உயிரி தொழில் நுட்பத்தை சார்ந்தே உள்ளது என்பதை மறுக்க இயலாது.
பொதுவாக பல கல்லூரிகளில் பயோ கெமிஸ்ட்ரி பாடங்கள் உண்டு. கோயம்புத்தூர் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயோ கெமிஸ்ட்ரி வித் நானோ டெக்னாலஜி (நுண்ணுயிரியியலுடன் நானோ தொழில்நுட்பம்) என்ற இளங்கலை முன்று ஆண்டு பட்டப்படிப்பு உள்ளது.
இந்தப் படிப்பு குறித்து அக்கல்லூரி துறைத் தலைவர் ஜெ.ரத்தினமாலா நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
"இந்த பாடப் பிரிவு பயோமெடிக்கல் அப்பிளிகேஷன்ஸ், நானோமெட்டிரியல்ஸ், பயோ நானோடெக்னாலஜி போன்ற பாடப் பிரிவுகளை கொண்டது.
இந்த படிப்பில் மிகவும் சிறிய விஷயங்களை ஆய்வு செய்வதுடன், வேதியல், இயற்பியல், மூலப்பொருள் அறிவியல் மற்றும் பொறியியல் போன்ற பிற விஞ்ஞானதுறைகளிலும் ஆய்வு செய்யலாம். இந்தியா உள்பட பல நாடுகளில் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்தப் படிப்பில் சேருவதற்கு பிளஸ் டூவில் அறிவியல் பாடத்தில் 60 சதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தொடக்கத்தில் இந்த மாணவர்களுக்கு நுண்ணுயிரியல் துறையில் உள்ள அடிப்படை பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படும். பின்னர் பாசி, பூஞ்சைகாளான் வகைகள், பயன்பாடுகள் குறித்தும் நானோடெக்னாலஜி, பயோமெடிக்கல், தொழில்நுட்பவியல் பாடங்கள் நடத்தப்படும். பின்னர் எங்கள் கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மாணவர்கள் கள ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவமனையின் செயல்பாடு, வரும் நோயாளிகள், நோய்களின் தன்மை உள்ளிட்டவை குறித்து மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இறுதி ஆண்டில் மாணவர்கள் தங்களுக்கு தெரிந்த அல்லது அவர்களில் ஊர்களில் உள்ள மருத்துவமனையில் 15 நாள் கள ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்கள் விரும்பும் மருத்துவமனைக்கு கடிதம் வழங்குவோம்.
மாணவர்கள் அந்த மருத்துவமனையின் மொத்த செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரித்து கருத்தரங்கில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் எங்கள் கல்லூரியில் இத்துறை முதுகலை முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பினையும் வழங்கி வருகிறது.
நோய்கட்டுப்பாட்டுத்துறை மற்றும் தடுப்பிற்கான மையத்தில் அநேக பணியிட ங்களுக்கு நுண்ணுயிரியல், நுன்ணுயிரியல் நானோதொழில்நுட்பம் படித்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த படிப்பு படித்தால் மருத்துவத்துறை, விவசாயத்துறை, உணவுத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் பல துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன'' என்றார்.
-எஸ்.பாலசுந்தரராஜ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com