பிசினஸ் அனட்டிக்ஸ் படிக்கலாம்!

பிசினெஸ் அனலிட்டிக்ஸ் சம்பந்தமான படிப்புகளை படித்தால் பெரிய தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும். 
பிசினஸ் அனட்டிக்ஸ் படிக்கலாம்!

பிசினெஸ் அனலிட்டிக்ஸ் சம்பந்தமான படிப்புகளை படித்தால் பெரிய தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும். 
பொதுவாக தொழில் நிறுவனங்கள் இலாப நோக்கோடு செயல்பட வேண்டியது அவசியம். தொழில் நிறுவனத்தின் வியாபாரம் பெருகுகிறதா, குறைகிறதா, இலாபம் கிடைக்கின்றதா, நட்டத்தில் இயங்குகிறதா என்பதை அவ்வப்போது அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு அந்த பணியை அந்த தொழில் நிறுவனத்தில் உயர்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் அலசி ஆராய்ந்து அது குறித்து அறிக்கையை நிர்வாகத் தலைமைக்குத் தெரிவிப்பார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் தொழில் நிறுவனத்தின் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த நிர்வாகம் முடிவெடுக்கும். அவ்வாறு முடிவு எடுப்பதற்கு அந்த தொழில் நிறுவனத்தின் நிலைமை குறித்து அலசி ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை முக்கிய காரணியாக விளங்குகிறது. 
இவ்வாறு தொழில் நிறுவனங்கள் குறித்து அலசி ஆராய வேண்டுமானால் அது சம்பந்தமான கல்வியைக் கற்றிருப்பவர்கள் தேவைப்படுகிறார்கள். அவ்வாறு அலசி ஆராய்வது பிசினெஸ் அனலிட்டிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
பிசினெஸ் அனலிட்டிக்ஸ் படிப்புகளை நடத்தும் கல்வி நிலையங்கள் :
1. Indian Institute of Technology Kharagpur } http://www1.iitkgp.ac.in/pgdba/
2. Praxis Business School } http://praxis.ac.in/programs/
3. Manipal Global Academy Of Data Science } https://upskill.manipalprolearn.com/pgd}data}science?utm_source=AnalyticsIndiaMagazine&utm_medium=Sidebanner&utm_campaign=
NR_IA
4. International Institute of Digital Technologies } http://www.iidt.edu.in/courses.php
5. Symbiosis Centre for Information Technology } https://
www.scit.edu/mba_dsda
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com