கைகள் இல்லாமல் பைக் ஓட்ட முடியும்!

பைக்குகளில் சாலைகளில் பறந்து செல்பவர்களைப் பார்த்து, "ஐயோ... நம்மால் இப்படி பைக்கில் செல்ல முடியவில்லையே' என ஏங்கும் கை இல்லாதவர்களின் கவலையைப் போக்கியுள்ளனர் பொறியியல் மாணவர்கள். 
கைகள் இல்லாமல் பைக் ஓட்ட முடியும்!

பைக்குகளில் சாலைகளில் பறந்து செல்பவர்களைப் பார்த்து, "ஐயோ... நம்மால் இப்படி பைக்கில் செல்ல முடியவில்லையே' என ஏங்கும் கை இல்லாதவர்களின் கவலையைப் போக்கியுள்ளனர் பொறியியல் மாணவர்கள். 
திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடி ஜெ.பீ. பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள்தான் கைகள் இல்லாத மாற்றுத்திறனாளிகளின் கவலையைப் போக்கும் வகையில் புதிய வாகனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக கால்கள் இல்லாதவர்கள் அல்லது கால்களின் செயல்பாடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் பைக்குகளை ஓட்டிச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால்,  இரு கைகளும் இல்லாத அல்லது கைகளின் செயல்பாடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் பைக்குகளை ஓட்டிச் செல்வதை நாம் பார்த்திருக்க மாட்டோம். 

சாமானியர்களாகிய நாம் இது பற்றி சிந்திந்திருக்கவே மாட்டோம். ஆனால், ஆய்க்குடி ஜெ.பீ. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தோன்றிய இந்த சிந்தனைதான், கைகள் இல்லாத, கைகள் செயல்படாத மாற்றுத்திறனாளிகளும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் புதிய வாகனத்தை உருவாக்க முடிந்துள்ளது. கைகள் இல்லாதவர்களின் ஏக்கத்தைப் போக்கியுள்ள கல்லூரியின் மெக்கானிக்கல் துறை மாணவர்கள் வேதநாயகம், கிவியோன், ஜிபின் பி ஜார்ஜ், அருண்ராஜ், வில்சன் ஆகியோர் நம்மிடம் கூறியது:

""பொதுவாகவே சாதாரண மக்களுக்கான புராஜெக்டுகளை விட இது போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வடிவமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியமாக இருந்தது. அதற்காக பல விஷயங்களைத் தேர்வு செய்தோம். அவற்றில் சில ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அப்போதுதான் கால்கள் இல்லாதவர்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான வசதி இருக்கும் நிலையில், கைகள் இல்லாதவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு இல்லாதது தெரிய வந்தது. பல இடங்களில் கைகள் இல்லாதவர்கள் மற்றவர்களின் துணையுடன்தான் செல்ல வேண்டிய நிலை இருப்பதையும் தெரிந்து கொண்டோம். இதைத் தொடர்ந்து எங்கள் கல்லூரியின் மூத்த மாணவர்கள் ஷெரின்ஷாம், சுப்பிரமணி, ஆஸ்டின் கோல்ட்வின் ஆகியோரின் உதவியுடன்  அவர்கள் ஏற்கெனவே உருவாக்கியிருந்த வாகனத்தில் பல மாற்றங்களைப் புகுத்தி கைகள் இல்லாத மாற்றுத்திறனாளிகள் ஓட்டக் கூடிய 
வாகனத்தை உருவாக்கினோம். 

இந்த வாகனத்தை இரு கால்களையும் பயன்படுத்தி இயக்க முடியும். கால்களைப் பயன்படுத்தி 7 வகையான இயக்க நிலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு கால்களையும் பயன்படுத்தி வாகனத்தின் ஸ்டியரிங்கை இயக்க முடியும். வலது காலைப் பயன்படுத்தி ஆக்சிலேட்டரை இயக்க முடிவதுடன், ஒலி எழுப்பவும் முடியும். இடது காலைப் பயன்படுத்தி பிரேக், இண்டிகேட்டர் மற்றும் சீட் பெல்ட்டினை சரி செய்யவும் முடியும். 

அண்ணா பல்கலைக்கழகத்தின், திருநெல்வேலி மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ஆகியவை சார்பில் நடைபெற்ற நந்ண்ப்ப் நன்ம்ம்ண்ற் டழ்ர்த்ங்ஸ்ரீற் உஷ்ல்ர் -வில் நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகளுக்கு மத்தியில் எங்களின் புதிய உருவாக்கம் முதலிடத்திற்கு தேர்வு பெற்றது. 

எங்களை, அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். இந்த வெற்றியானது எங்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. ஜெ.பீ. பொறியியல் கல்லூரியின் நிர்வாகி அருள்சகோதரி பிரதீபா, முதல்வர் முனைவர்.ராஜ்குமார் மற்றும் துறைத்தலைவர் சாமி உள்ளிட்டோர் புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்க எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர்'' என்றனர் பெருமையுடன். 

பொறியியல் படித்து விட்டு வேலை கிடைக்காதவர்கள் மத்தியில் முயற்சியும், ஒத்துழைப்பும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை இந்த இளைஞர்களின் உருவாக்கம் உணர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com