வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 165

​புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 165


புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். நடாஷா எனும் பெண்ணும் மீசைக்காரர் எனும் போலீஸ்காரரும் அங்கு காத்திருக்கிறார்கள். A historical என்று சொல்ல வேண்டுமா அல்லது an historical என்பது சரியா என கணேஷ் கேட்க புரொபஸர் ஏன் a historicalஎன்பதே சரி என்பதை விளக்குகிறார்.

புரொபஸர்: consonant ஒலியென்றால் ஹ தான் வர வேண்டும் என்றேன் இல்லையா! Historical என்பதன் முதல் எழுத்து "ஹி' என ஆரம்பிக்கிறதா அல்லது "இ'யா? 
கணேஷ்: இஸ்டிரியா? ஹிஸ்டிரியா? குழப்பமா இருக்குதே.
ஜூலி: ஹிஸ்டிரி தான்.
கணேஷ்: அப்படீன்னா ஹ history தான்.
நடாஷா: ஏர்ன்ழ் என்பது an hour தானே?
புரொபஸர்: ட்ர்ன்ழ் என்பதை ஹவர் என்றல்ல ஆர் என்றே உச்சரிக்கிறோம். வவல் ஓசையுடன் இது தொடங்குகிறது. ஆகையால் an hour தான் சரி.
கணேஷ்: சார்... அப்போ எழுத்தை வைத்து கண்டுபிடிக்க முடியாதா?
புரொபஸர்: முடியாது மட்டுமில்ல; அப்படி கண்டுபிடிக்க முயல்வதும் தப்பாக முடியும். ஓர் எழுத்துக்கான உச்சரிப்பு அது இருக்கும் சொல்லைப் பொறுத்து மாறும். இது ஆங்கிலத்தின் தனித்துவம். மய்க்ஷங்ப்ண்ங்ஸ்ஹக்ஷப்ங் என்பதில் ன் எழுத்து அ எனும் ஓசையைக் கொண்டிருக்கிறது. unfair உம் அப்படித் தான். ஆனால் utopian world என்பதில் u எழுத்தின் ஓசை "உ' அல்ல, "யு' - யுட்டோப்பியா. ஆகையால் a utopia.
கணேஷ்: அதென்ன சார் யுட்டோப்பியா?
புரொபஸர்: யுட்டோப்பியா என்பது ஒரு perfect place. எந்த குறையுமற்ற உன்னதமான ஓர் உலகம்; அப்பழுக்கற்ற இடம். 
கணேஷ்: யுட்டோப்பியாவுக்கு  எதிரான சொல்?
நடாஷா:   dystopia.
புரொபஸர்: இது யுட்டோப்பியாவுக்கு நேர் எதிரான நிலை. ஒரு கற்பனையான உலகம். எல்லாமே கெட்டு சீரழிந்த உலகம். சர்வாதிகார ஆட்சி  நடக்கிற, சுற்றுச்சூழல் சீர்கெட்டுப் போன உலகம்.
கணேஷ்: டிஸ்டோப்பியா பற்றி நீங்க சொல்வதைக் கேட்க ரொம்ப பரிச்சமாய் தோணுதே சார்!
புரொபஸர்: சரி... நமக்கு எதுக்கு அரசியல்? விசயத்துக்கு வருவோம். சில அரசியல்வாதிகள் இருப்பார்கள். வறுமை உள்ளிட்ட மக்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்னைகளைப் பற்றி கருத்து ஏதும் தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் இன அடையாளத்துக்கு இழுக்கென்றால் கிளம்பி வந்து போராடுவார்கள். இன்னும் சிலர் ஊழலைத் தவிர வேறெதைப் பற்றியும் பேச மாட்டார்கள். இவர்களைப் பற்றி பேசும் போது they have a one - track mind என்பார்கள். இங்கே ர் என்பதன் ஒலி என்ன? ஒ தானே?
கணேஷ்: ஆமார் சார் ஒன் டிராக். ஒன், டு, த்ரீ என்று தானே சொல்கிறோம்.
புரொபஸர்: இல்லை. நல்லா யோசிச்சு பார். ஒன், டூ. த்ரீ என்றா சொல்கிறோம்? வொன், டூ, த்ரீ என்பதல்லவா சரி?
கணேஷ்: ஆமா சார்... என் டீச்சர் எனக்கு ஸ்கூலில் சரியா சொல்லித் தரல.
புரொபஸர்: அதில என்ன இருக்கு? இப்போ கத்துக்கிட்டே இல்ல. Outgoing, outrageous, ongoing என்பதில் எல்லாம் ங்ய் தான் வரும். முதல் இரு சொற்களில் "ஒள' எனும் ஒலியும் மூன்றாவதில் "அ-ஒ' என இடைப்பட்ட ஒலியும் வருகிறது. இப்படி ஞ எனும் எழுத்து விதவிதமான ஒலிகளில் தோன்றுவதை கவனி. ஆகையால், he has a one-track mind, but he is an outstanding talent. அதே போல mango என்பதில் "எம்' ஒலியும் MBA என்பதில் "எ' 
ஒலியும் என இருவேறு ஒலிகள் வருகின்றன. He used to eat a mango daily while preparing for an MBA degree.  
கணேஷ்: அடடா
நடாஷா: சார், ட்ங்ழ்க்ஷ என்பதற்கு முன் ஹ சரியா, இல்ல ஹய் சரியா?

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com