ட்ரோன் கல்வி: அதிக வேலைவாய்ப்பு!

ராணுவ கண்டுபிடிப்பான ட்ரோன்கள் இப்போது பெரும்பான்மையான மக்களிடம் அறிமுகமாகி, அவர்களின் அன்றாட தொழில்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ட்ரோன் கல்வி: அதிக வேலைவாய்ப்பு!

ராணுவ கண்டுபிடிப்பான ட்ரோன்கள் இப்போது பெரும்பான்மையான மக்களிடம் அறிமுகமாகி, அவர்களின் அன்றாட தொழில்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கட்டுமானம், விவசாயம், காப்பீடு, சுரங்கம், ஊடகம், காவல் ஆகிய துறைகளின் பயன்பாட்டில் அதீத வளர்ச்சி பெற்றுள்ளதோடு, பல புதுமைகளுக்குக் காரணமாகவும் இருந்துவருகிறது.

இந்தத் துறையில் ஏற்கெனவே ரூ. 2 ஆயிரம் கோடி சந்தை மதிப்பில் பல தொழில்முனைவுகள் (ஸ்டார்ட்அப்) தொடங்கிவிட்டன. இந்தியாவில் மட்டும் சுமார் 37 நிறுவனங்கள் ஆளில்லா வான்வெளி ஊர்திகள் (UAV) மற்றும் ட்ரோன்கள் தொடர்பான தீர்வுகளை அளித்து வருகின்றன. நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் இயங்கி வரும் எர்ப்க்ம்ஹய் நஹஸ்ரீட்ள் என்ற முதலீட்டு வங்கி கடந்த ஆகஸ்ட் 31-இல் அளித்த ஆய்வு மதிப்பின்படி வரும் 2020 ஆம் ஆண்டு ட்ரோன் நிறுவனங்களுக்கான சர்வதேச சந்தை ரூ. 7.4 லட்சம் கோடியாக (100 பில்லியன் டாலர்) இருக்கும். 

இன்றைய நிலையில், இந்தியாவில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ட்ரோன்கள் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு, ட்ரோன்கள் இறக்குமதியில் 22 சதவீதத்துடன் நம் நாடு முன்னணியில் உள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் ட்ரோன் சந்தை ரூ. 3.7 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, நிர்வாகம், உற்பத்தி மேம்பாடு என்பதோடு மட்டுமல்லாமல், புவியியல்வரைபடம், வேளாண் ஆய்வு, பேரழிவு மேலாண்மை, தேடுதல் மற்றும் மீட்பு, சரக்குப் போக்குவரத்து, வெள்ள மேலாண்மை, எல்லை ரோந்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கடல் கண்காணிப்பு, முக்கிய உள்கட்டமைப்பு கண்காணிப்பு, உளவு சேகரிப்பு போன்றவற்றிலும் ட்ரோன் தொழில்நுட்பம் சக்திவாய்ந்த ஆயுதம் என்ற வகையில், அதன் முழுத்திறனையும் நாம் உணரவேண்டிய தருணம் இது. Association for Unmanned Vehicle Systems International (AUVSI) அமெரிக்காவில் மட்டும் ட்ரோன் துறையில் 70 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவில் ட்ரோன் தொழில்நுட்பம், செயல்பாடு, இயக்குவது, உரிமம் பெறுவது குறித்த கல்வியை பல தனியார் நிறுவனங்கள் அளிக்கத் தொடங்கியுள்ளன. 

நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு ஆந்திரம், கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, குஜராத், நாக்பூர் உள்ளிட்ட 9 இடங்களில் செயல்பட்டு வருகிறது Indian Institute of Drones (IID). இங்கு ட்ரோன் குறித்த முழு அறிவு, சந்தை, கட்டுப்பாடுகள் குறித்த ஒருநாள் பயிற்சி (ரூ. 4900), கட்டுப்பாடு உருவகப்படுத்துதல் மற்றும் ட்ரோன் பைலட் குறித்த 5 நாள் பயிற்சி (ரூ. 19,500), ட்ரோனை உருவாக்குவது உள்ளிட்ட 7 நாள் பயிற்சி (ரூ. 28,500), ட்ரோன் குறித்த 10 நாள் விரிவான பயிற்சி (ரூ. 49 ஆயிரம்) அளிக்கப்படுகிறது. கட்டணத்துடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

பெங்களூருவைச் சேர்ந்த Avian Aerospace நிறுவனம் UAV குறித்து பயிற்சி அளிக்கிறது. இங்கு 7 நாள் பயிற்சிக்கு ரூ. 4250, ஒரு மாதப் பயிற்சிக்கு ரூ. 9,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

லக்ணோவில் இருந்து செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனம் TechEagle. கான்பூர், இந்திய தொழில்நுட்பக் கழக முன்னாள் மாணவர்களால் நடத்தப்படும் இந்நிறுவனத்தின் பெங்களூரு பிரிவில், வரும் நவம்பர் 17 முதல் 26 வரை 10 நாள்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், ரோட்டரி விங் பயிற்சிக்கு ரூ. 20 ஆயிரம், Fixed Wing பயிற்சிக்கு ரூ. 25 ஆயிரம், இரண்டுக்கும் சேர்த்து ரூ. 40 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் இருந்து இயங்கும் Aerizone நிறுவனம் பல துறைகளில் ட்ரோன் சேவையை வழங்கி வருவதோடு, யுஏவி பைலட் பயிற்சியையும் வழங்குகிறது.


கடந்த 2014 முதல் சென்னையை தளமாகக் கொண்டு பெங்களூரு, மும்பை, புணே, ஹைதராபாத், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது Maavan Drone Academy. CÕ Multirotor Pilot Training, Fixed Wing Pilot Training, Aerial Cinematography, Aerial Mapping and Imagery, Thermal Inspection, UAV Engineering உள்ளிட்ட 6 டிப்ளமா, 2 முதுநிலை டிப்ளமா கோர்ஸ்களை நடத்துகிறது. இதில் ட்ரோன் பைலட் பயிற்சிக்கு ரூ. 45 ஆயிரம், ட்ரோன் இன்டஸ்ட்ரியல் ஏரியல் டிப்ளமா பயிற்சிக்கு ரூ. 81 ஆயிரம், மஅய பொறியியல், ஏரியல் மேப்பிங் ஆகிய முதுநிலை டிப்ளமா கோர்ஸ்களுக்கு தலா ரூ. 60 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com