வாங்க இங்கிலீஷ் பேசலாம் -  161

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் -  161

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அப்போது புரொபஸர் லூயிஸ் கேரல் எனும் பிரசித்தி பெற்ற எழுத்தாளர் தனது Jabberwocky கவிதையில் புதிதாய் உருவாக்கி ஆங்கிலத்துக்கு அறிமுகப்படுத்தின neologism எனப்படும் இருவேறு சொற்களை ஒட்டுப்போட்டு உருவாக்கின புதுச்சொற்களைப் பற்றி பேசுகிறார். கேரல் அறிமுகப்படுத்தின Frumious, galumph போன்ற சொற்களை அவர் விளக்குகிறார். அப்போது நடாஷா ஸ்ரீட்ர்ழ்ற்ப்ங் எனும் சொல்லைப் பற்றி கேட்கிறாள். 

புரொபஸர்: ஆமாம் chortle என்பது ஒரு சுவாரஸ்யமான ஒட்டுச் சொல். இது chuckle மற்றும் snort ஆகிய சொற்களின் இணைவு. Chortle என்றால் சத்தமாய் குதூகலமாய் சிரிப்பது. இதன் மூலச் சொற்களைப் பார்ப்போம். Chuckle என்றால் அமைதியாய் தனக்குளாகவே சிரித்துக் கொள்வது. அதாவது சிலரைப் பார்த்து கேலி பண்ணும்போது நக்கலாய் வாய்க்குள்ளாகவே சிரித்துக் கொள்வார்களே அது. Snort என்பது ஒரு சுவாரஸ்யமான சொல். ஆங்கிலத்தில் பலவகையான சிரிப்புகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் தனித்தனிச் சொல் வைத்திருக்கிறார்கள். Snort என்பது மூக்கால் ஒரு வகையாய் சிரிப்பது. 

கணேஷ்: வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைலில்...

புரொபஸர்: யெஸ்... கிட்டத்தட்ட. திடீரென நம்மை மறந்து சத்தமாய் வேகமாய் சிரிக்கையில் மூக்கு வழி மூச்சு விடுவோமே அது தான் இது. Chuckle மற்றும் chortle ரெண்டையும் சேர்த்தால் என்னவாகும் யோசி?

கணேஷ் குறட்டை ஒலியுடன் சிரித்துப் பார்க்கிறான்: க்ர்ர்ர்... கிளக்... ஹா ஹா
புரொபஸர்: உண்மையில் chortle என்பது அதுவல்ல. chortle எனும் சொல்லின் ஆங்கில விளக்கம் இது: laugh in a noisy, gleeful manner.
கணேஷ்: Gleeful என்றால்?
புரொபஸர்: Glee என்றால் உவகை, பேருவகை. பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும் போதோ அல்லது நம் எதிரிகளுக்கு பிரச்னை வரும் போதே நாம் அடையும் மிகையான உற்சாகமே ஞ்ப்ங்ங். ஒருவித 
elation, euphoria, exhilaration.
கணேஷ்: ஓ... இப்போது விளங்கியது. பிக்பாஸில் ஒவ்வொரு சின்ன சின்ன விசயத்துக்கு ஐஷ்வர்யா கத்துவாங்களே அதானே?
புரொபஸர்: ம்ம்ம்... கிட்டத்தட்ட.  ஐ.பி.எல் போட்டி அரங்குகளில் நம் அணி வெல்லும் போது, ஒரு திரையரங்கில் ஹீலோ வில்லனை அடித்துத் துவைக்கும் போது நாம் மனம் திளைத்து கூவுவோமே அந்த screaming with delight அது ஒருவித chortle தான்.  
நடாஷா சத்தமெழுப்பாமல் சிரிக்கிறாள்.
புரொபஸர்: She is sniggering? 

(நடாஷாவை நோக்கி) சரியா?
நடாஷா வேடிக்கையாய்: சேச்சே...
புரொபஸர்: Yes you are. Snigger என்றால் வாயை மூடி சத்தமெழுப்பாமல் ஏளனமாய் சிரிப்பது. அது ள்ய்ண்ஸ்ரீந்ங்ழ் என்றால் வாயைப் பொத்தி சிரிப்பது. A smothered laugh.
.
கணேஷ்: நமுட்டுச் சிரிப்பு
புரொபஸர்: Bingo
கணேஷ்: Bingo என்றால்?
புரொபஸர்: அது ஒரு வியப்பொலி அல்லது கூவிளி. ஒரு விசயத்தை சரியாக வெற்றிகரமாய் நிகழ்த்தினால் அந்த திகைப்பை வெளிப்படுத்துவதற்கான 
exclamation தான் bingo.
கணேஷ்: சூப்பர் மாதிரி
புரொபஸர்: ஆமாம். இந்த பிங்கோ என்பது ஒரு சீட்டு விளையாட்டு. அதில் சரியான வரிசைக் குறிகளை ஒருவர் சரியாய் கணித்துச் சொன்னால் அவர் வெற்றி பெறுவார். ஆகையால் அவர் வென்றதும் bingo என கத்துவார். அப்படித் தான் ஒருவர் சரியான ஒன்றை செய்து காட்டியதும் bingo எனக் கூவும் வழக்கம் உண்டானது. நான் சீட்டே விளையாடுவதில்லை, நாம் யாரும் இங்கே சீட்டாடவும் இல்லை, ஆனால் நான் இப்போது bingo சொன்னேன் பார்த்தாயா!
கணேஷ்: சார் smothered laugh என்று சொன்னீங்க. ஸ்மாதர் என்றால் என்ன?
புரொபஸர்: நல்ல கேள்வி. Stifle, suffocate
 என அதற்கு அர்த்தம். மூச்சுத் திணறடிப்பது, அப்படி செய்து கொல்வது. கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் ஸ்பின் பந்தை இறங்கி வந்து தடுத்தாடும் போது he smothered the spin என்று வர்ணனையாளர் கூறுவார். அதன் பொருள் சுழற்றி வீசப்பட்ட பந்து பிட்சில் பட்டதும் அது துள்ளி எழுந்து மேலும் சுழலாத வகையில் பேட்ஸ்மேன் அதன் அருகே போய் அதை "மூச்சுத் திணறடித்து' படுக்க வைத்து விட்டார் என்பது.
Smothered என்பது ஒரு கொடூரமான சொல். ஆனால் இங்கே அது கவித்துவமாய் பயன்படுகிறது பார்த்தாயா?
கணேஷ்: அடப்பாவமே

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com