குளிர்கால டிப்ஸ்!

இந்த சமயத்தில் வரும் தொண்டைவலி ஜலதோஷம் குணமாக துளசியுடன் கரும்புக்கட்டியும் சேர்த்து கஷாயம் தயார் செய்து குடிக்கவும்.
குளிர்கால டிப்ஸ்!

*குளிர் காலத்தில் ஜலதோஷம் பிடித்து அவதிப் படுபவர்கள் நல்லெண்ணெய்யில் விளக்கு ஏற்றி அதில் விரளி மஞ்சளின் நுனியைக் காட்டினால் புகை வரும் அதை பேப்பர் குழாய் மூலம் நுகர்ந்தால் சளித்தொல்லை தீரும்.

* குளிர்காலத்தில் குழந்தைகள் வெறும் காலுடன் நடந்தால்  சிலீர் என்று  குளிர் குழந்தைகளின் காலைத்தாக்கும். வீட்டில் இருக்கும் பழைய சாக்ûஸ  குழந்தைகளுக்கு மாட்டிவிட்டால் பிரச்னை தீரும்.

* இந்த சமயத்தில் வரும் தொண்டைவலி ஜலதோஷம் குணமாக துளசியுடன் கரும்புக்கட்டியும் சேர்த்து கஷாயம் தயார் செய்து குடிக்கவும்.

* பனிக்காலத்தில் அடிக்கடி ஜலதோஷம் இருமல் அவஸ்தை தரும் தினசரி உணவில் மிளகு, இஞ்சி சேரும் வண்ணம்  மிளகு ரசம், இஞ்சித் துவையல், மிளகுப் பொங்கல், மிளகுக் குழம்பு என்று செய்து சாப்பிட்டால் சளி, ஆஸ்துமா தொல்லைகளிலிருந்து தப்பிக்கலாம்.

* குளிர்காலத்தில் எங்களுடைய துணிகள் வைக்கும் பீரோவுக்குள் ஈரக்காற்று இருப்பதால் நன்றாக துவைத்து வைத்த ஆடைகளும், பட்டுப் புடவைகளும் மொரமொரப்பு இழந்து தொய்வாக காணப்படும். இதைத் தவிர்க்க பத்து சாக்பீஸ்களை ஒரு நூலில் கட்டி பீரோவின் உள்பகுதியில் மேலே கட்டித் தொங்க விடுங்கள். இது பீரோவில்  இருக்கும் காற்றில் உள்ள  ஈரப்பதத்தை எடுத்துவிடும்.

* பனிக்காலத்தில் நம் எல்லாருக்கும் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அதனால் அதிகமான எண்ணெய்யில் செய்த உணவுப் பொருட்கள், இனிப்புகள், அதிகம் பால் சேர்த்த கொழுப்புப் பொருட்கள் முதலியவற்றைத் தவிர்த்தாலே போதும். இரவு உணவை சீக்கிரமாகவே சூடாக சாப்பிடலாம்.

* இந்த பனிக்காலத்தில் நம் உடலை எப்போதும் குளிர்காற்று தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகாலை, மாலை நேரங்களில் வெளியில் செல்லும் போது காதில் பஞ்சு வைத்துக் கொண்டால் சைனஸ் ரொம்பவே தாக்காது. குழந்தைகள், வயதானவர்கள் இரவில் தூங்கும்போது ஸ்வெட்டர் அணியலாம். மின் விசிறிக்கு நேராக படுப்பதைத் தவிர்க்கவும்.

* குழந்தைகளுக்கு சளித்தொந்தரவு இருந்தால் தேங்காய் எண்ணெய்யை சூடு செய்து, அதில் கற்பூரத்தை தூளாக்கிப் போட்டு அந்த எண்ணெய்யை இளஞ்சூடாக தொண்டை, மார்பு, மூக்கு முதலிய இடங்களில் தேய்த்துவிட்டால் குழந்தைகளுக்கு சுகமான தூக்கம் கிடைக்கும்.

* குளிர்காலத்தில் இருமலால் அவதிப்பட்டால் இரவில் தூங்குவதற்கு முன்பு சூடான பாலில் சிறிது மஞ்சள் பொடி, மிளகுப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து தொடர்ந்து ஐந்து நாள் குடித்தால் இருமல் உபாதை நீங்கிவிடும். 


- கீதா ஹரிஹரன் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com