நாட்டுப்புற இசையில் திறக்குறள்: தாஜ் நூர் புதிய முயற்சி

தமிழ் திரை இசையில் தனித்துவம் பெற்று கவனித்தக்க இசையமைப்பாளராக வளர்ந்து வருபவர் தாஜ் நூர்.
நாட்டுப்புற இசையில் திறக்குறள்: தாஜ் நூர் புதிய முயற்சி

தமிழ் திரை இசையில் தனித்துவம் பெற்று கவனித்தக்க இசையமைப்பாளராக வளர்ந்து வருபவர் தாஜ் நூர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் குழுவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த இவர், 2010-ஆம் ஆண்டு வெளிவந்த "வம்சம்' படத்தின் மூலம் இசைமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து "எத்தன்', "ஞான கிறுக்கன்', "வெத்து வேட்டு', "நையப்புடை', "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி, ரசிகர்களின் அபிமான இசையமைப்பாளராக வளர்ந்து வருகிறார். திரை இசையில் ஆர்வம் செலுத்துவதுடன் அவ்வப்போது வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இவரின் அடுத்த முயற்சி, திருக்குறளை நாட்டுற புற இசையில் கொண்டு வருவது. இதன் முதற்கட்டமாக திருக்குறளின் இன்பத்துபாலில் உள்ள 7 குறள்களை தேர்வு செய்து அதற்கு இசையமைத்துள்ளார். ஒடிஸô மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஆர். பாலகிருஷ்ணன் அந்த 7 குறள்களுக்கும் நாட்டுப் புற பாடல்கள் பாணியில் புது விளக்கம் எழுதியுள்ளார். இந்த பாடல்களுக்கு இசையமைத்துள்ள தாஜ்நூர் இது பற்றி பேசுகையில்... "புது முயற்சியாக திருக்குறளுக்கு இசையமைக்கும் பணியில் இறங்கினேன்.

திருக்குறளுக்கு நாட்டுப் புற பாடல் பாணியில் விளக்கம் எழுதப்பட்டு, அது இசையாக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் ஒலிக்கும் போது, ஓவியர் ட்ராஸ்கி மருது பாடலுக்கு ஏற்ற ஓவியங்களை வரைந்துள்ளார். அந்த ஓவியங்கள் வீடியோவில் பாடல் ஒலிக்கும் போது இடம் பெறும். வேல்முருகன், அந்தோணிதாசன், சின்னப் பொண்ணு ஆகியோர்  இந்த பாடல்களை பாடியுள்ளனர். விரைவில் இப்பாடல்கள் வெளியாகவுள்ளது. திருக்குறள் நாட்டுப்புற இசை, ஓவியம் கலந்து வெளியாகவுள்ளது இதுவே முதன் முறை'' என்கிறார் தாஜ் நூர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com