விபத்தில்லா வெடி வெடிப்போம் !

குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் மேற்பார்வையில் வெடிக்க வேண்டியது அவசியம்.
விபத்தில்லா வெடி வெடிப்போம் !

தமிழக காவல் துறையும் மற்றும் தீயணைப்பு துறையும் குழந்தைகள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வழங்கும் ஆலோசனைகள்: 
* குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் மேற்பார்வையில் வெடிக்க வேண்டியது அவசியம்.
* பட்டாசு வெடிக்கும் போது காட்டன் ஆடை உடுத்துங்கள். மறவாமல் காலணி அணிந்து பட்டாசு வெடிக்க செல்லுங்கள்.
* சிலர் வெடிகளை கையில் பிடித்து கொளுத்தி தூக்கி எறிந்து வெடிப்பது உண்டு. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால், உங்களுக்கும் உங்களை சுற்றி இருக்கும் நபர்களுக்கும் கூட பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
* பெரிய வெடியாக இருந்தாலும் சரி, சிறிய வெடியாக இருந்தாலும் சரி, எந்த பட்டாசு வெடிப்பதாய் இருந்தாலும் நீண்ட ஊதுபத்தி பயன்படுத்தி வெடியுங்கள்.
* எக்காரணம் கொண்டும் வெடிக்காதப் பட்டாசுகளை கையில் எடுக்க வேண்டாம். அவை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். சில சமயங்களில் புஸ்வாணம் கூட வெடிக்கும் வாய்ப்புகள் உண்டு.
* பட்டாசு வெடிக்கும் போது திறந்த வெளி இடங்களில் சென்று வெடியுங்கள். அருகருகே வீடு இருக்கும் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதால் சில சமயங்களில்
 வீட்டுக்குள் பட்டாசு செல்லவும், வயதானவர்கள், இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு பாதிப்பும் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
* பட்டாசு வெடிக்கும் போது எப்போதும் அருகே ஒரு பக்கெட் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள். தீக்காயம் ஏற்பட்டால் முதலில் நீர் ஊற்றவும் அல்லது தரையில் படுத்து உருளவும்.
* தமிழக காவல் துறையும், தீயணைப்பு துறையும் உங்களுக்காக எப்போதும் சேவை செய்ய காத்திருக்கிறது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனே 101, 102 என்ற எண்ணுக்கு அழைக்க மறக்க வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com