பிரிஜ்ஜில் வைக்கக் கூடாதவை

எந்தப் பொருளாக இருந்தாலும் பாலிதீன் கவர்களில் போட்டு வைத்தால்  ஒரு பொருளின் வாசனை மற்ற பொருளுக்குப் பரவாது.
பிரிஜ்ஜில் வைக்கக் கூடாதவை

டிப்ஸ்... டிப்ஸ்...

• வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு இவற்றை பிரிஜ்ஜில் வைக்கக் கூடாது. 

• வாழைப் பழங்களை வைத்தால் கறுத்துவிடும்.

• காய்கறிகளை கழுவாமல்  வைக்கக் கூடாது.

• ஊறுகாய் வகைகளை பிரிஜ்ஜுக்குள் வைக்கக் கூடாது.

• எந்தப் பொருளாக இருந்தாலும் பாலிதீன் கவர்களில் போட்டு வைத்தால்  ஒரு பொருளின் வாசனை மற்ற பொருளுக்குப் பரவாது.
-  ஆர்.மீனாட்சி

• சுடு சோற்றில் வெந்தயத் தூள், கறிவேப்பிலைப் பொடி கலந்து முதல்  உருண்டையைப் பிசைந்து சாப்பிட்டு வந்தால்  இரத்தக் கொதிப்பு குணமாகும். 

• பாகற்காய், வாழைப்பூ, பீன்ஸ், முள்ளங்கி, வாழைத்தண்டு, கோஸ் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வர நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

• இலுப்பை எண்ணெய்யில் மஞ்சள் தூள் கலந்து கால் வெடிப்பில் தடவி வர விரைவில் குணமாகும். 

• எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து தினமும் அருந்தி வர உடல் எடை குறைவதுடன், வயிறும் சுத்தமாகும். 

• கஸ்தூரி மஞ்சளில் எலுமிச்சைப்பழச்சாறு கலந்து தினமும்  தடவி வர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

• வல்லாரையை  அடிக்கடி உணவில் சேர்த்து வர இரத்த சோகை நீங்கும்.

• பல்  வலி, ஈறு  வீக்கம் இருந்தால் 5 மிளகும், 2 கிராம்பையும் பொடித்து பல் வலி உள்ள இடத்தில் தடவினால், வலி குறையும்.  அதுபோன்று,  ஒரு டம்ளர் சூடான நீரில் இரண்டு தேக்கரண்டி  எலுமிச்சைச் சாறு கலந்து வாய்க் கொப்பளித்தால், வாயில் நோய்  தொற்று உண்டாக்கும்    பாக்டீரியா  அழியும். 
 - சரோஜா சண்முகம்

• கிரைண்டரில் இட்லி மாவு அரைக்கும் போது அரிசி மாவு சிக்காமல் இருக்க, ஒரு பிடி உளுந்தை  சேர்த்து அரைத்தால்  மாவு அரைக்க சுலபமாக இருக்கும். மாவும் வெண்ணெய்ப்போல் சீக்கிரம் மசிந்துவிடும்.

• கோதுமை மாவு அரைக்கும்போது ஒரு கிலோ  கோதுமைக்கு ஒரு கைப்பிடி அளவு கொண்டைக் கடலையைப் போட்டு அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும். உடலுக்கும் சத்து நிறைந்தது.

• சாதம் குழைந்து விட்டால் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து, பிறகு சாதத்தை வடித்தால் சாதம் பூப்போல இருக்கும்.

• வெந்தயக் குழம்பை இறக்கும் சமயத்தில் ஒரு தேக்கரண்டி எள்ளுப் போடியைப் போட்டால் குழம்பு மிகவும் வாசனையுடன் இருக்கும்.
-  எம்.ஏ.நிவேதா 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com