அதிர்ஷ்டத்திற்கு காத்திருக்கும் வீராங்கனை!

விளையாட்டுத் துறையில் இருந்தாலும் எல்லாராலும் மிதாலிராஜ், தீபாமாலிக், பி.வி.சிந்து, சாக்சிமாலிக், சானியா மிர்சா, சாய்னா நெய்வால்  போன்று
அதிர்ஷ்டத்திற்கு காத்திருக்கும் வீராங்கனை!

விளையாட்டுத் துறையில் இருந்தாலும் எல்லாராலும் மிதாலிராஜ், தீபாமாலிக், பி.வி.சிந்து, சாக்சிமாலிக், சானியா மிர்சா, சாய்னா நெய்வால்  போன்று ஆகிவிட முடியாது.  மாநில அளவில் தங்கப்பதக்கங்களை குவித்தாலும் மாநிலமும், மத்திய அரசும் கண்டுகொள்ளாது.  ஸ்பான்சர்களும் உங்களை தேடி வரமாட்டார்கள்.
சந்தோஷ் சர்மா
சந்தோஷ் சர்மா,  ஹரியானாவை சேர்ந்தவர்.  பவர் லிஃப்டிங்கில், மாநில அளவில் 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

"எனக்கு மட்டும் போதுமான ஆதரவு சரியான நேரத்தில் கிட்டியிருக்குமானால், தேசிய அளவில் கூட நான் சாதித்திருப்பேன்''  என்கிறார். 

அதிர்ஷ்டவசமாக இவருக்கு ஒரு இடத்தில் பவுன்சர் வேலை 9,000 ரூபாயில் கிடைத்தது. ஆனால், சில மாதங்களிலேயே  அதை தொடர முடியாமல் நிறுத்தி விட்டார்.  பின்னர்,  தந்தையின்  கடையிலேயே   வேலை செய்ய ஆரம்பித்தார்.

சோனாபட் நியூ மகாவீர் காலனியில் இவர்களுடைய ஜெய்சங்கர் டீ  ஸ்டால் உள்ளது. இது வீடு கம்  டீ ஸ்டால்.  இப்பவும் சில மல்யுத்தப் போட்டிகளில் பங்கு கொள்கிறார். சமீபத்தில் கூட  பீகாரில் நடந்த ஒரு போட்டியில் கலந்து கொண்டு 5,000 ரூபாய் பரிசு பெற்றார்.

தற்போது மல்டி பிளக்ஸ் தியேட்டரில் மீண்டும் பவுன்சர் வேலை கிடைத்துள்ளது. இதன் சம்பளம் 14,000 ரூபாய், 24 வயதாகும் சந்தோஷ் சர்மாவுக்கு பொற்காலம் வருமா?  பொறுத்திருந்துதான் பாரக்க வேண்டும்.
-  ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com