உதடுகளை கவனியுங்கள்

நெய், பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உதட்டில் தடவி வந்தால் நேச்சுரல் பளபளப்பு கிடைக்கும்.
உதடுகளை கவனியுங்கள்

• உதடுகளின் பொதுவான பிரச்னை வறண்ட உதடுகள்தான். சீசன், உணவுப் பழக்கம் என்று ஏகப்பட்ட காரணங்கள் இதற்கு  இருக்கின்றன. இதற்கு ஒரே  தீர்வு ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதுதான். கிரீன் டீயும் உடம்பின் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

• உதடுகளுக்கு தரமான மாய்சரைஸர் பயன்படுத்துவதும் நல்ல செயல்தான். உங்கள் ஹேண்ட் பேக்கில் சீப்பு,  ஃபேஸ் வாஷ், சன் ஸ்கிரின் லோஷன் வைத்திருப்பதைப் போல தரமான "லிப் பாம்'  ஒன்றையும் வைத்திருங்கள்.

• நெய், பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உதட்டில் தடவி வந்தால் நேச்சுரல் பளபளப்பு கிடைக்கும்.

• உங்கள் உதடுகள்  கறுப்பாக இருக்கிறதா? தினமும் பாதாம் எண்ணெய்யை  உதட்டில் தடவி வந்தால் கறுப்பு நிறம் அகன்றுவிடும்.

• காய்கறிகள், பழங்கள், தேங்காய் முழுதானியங்களை உணவில் நிறையச் சேர்த்துக் கொள்ளுங்கள் அழகான உதடுகளைப் பெறலாம். 
-  கீதா ஹரிஹரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com