டிப்ஸ்... டிப்ஸ்...

படிகாரம் கலந்த நீரைக் கொண்டு காலையில் முகம் கழுவிவர, எப்படிப்பட்ட கருப்பான வடுவும் மாறிவிடும். குறிப்பாக முகப்பரு வடுக்கள் மறைந்துவிடும்.

• குண்டானவர்கள் பால் சாப்பிடுவதை தவிர்த்து விடவேண்டும். அதே நேரத்தில் ஆடை நீக்கிய பால், கொழுப்பு நீக்கிய சூப் போன்றவற்றை பருகுதல் வேண்டும். குளிர்பானம், காபி, டீ  போன்றவற்றை அடிக்கடி குடிப்பதைத் தவிர்த்துவிட்டு இளநீர், பழச்சாறு பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

• படிகாரம் கலந்த நீரைக் கொண்டு காலையில் முகம் கழுவிவர, எப்படிப்பட்ட கருப்பான வடுவும் மாறிவிடும். குறிப்பாக முகப்பரு வடுக்கள் மறைந்துவிடும்.
- கே.பிரபாவதி

• வெயில் காலத்தில் மோர் விரைவில் புளித்துவிடும். அப்படிப் புளிக்காமல் இருக்க வாழை இலையைச் சிறு துண்டுகளாக்கி மோரில் போட்டு வைக்க வேண்டும்.

• பூரணம் உருட்ட வராமல்  சற்று இளகலாக இருந்தால் ஒரு தேக்கரண்டி பால்பவுடரைக் கலந்து  பிசைந்து  உருட்டினால் பூரணம் கெட்டியாகும் சுவையும் கூடும்.

• பாலுக்கு  உறை ஊற்றி  நீண்ட நேரம் உறையாமல் இருந்தால்,  ஒரு பச்சை மிளகாயைக்  காம்பு கிள்ளிப்போட்டு விட்டால் காலையில் கெட்டித் தயிர் கிடைக்கும்.

• குழம்புக்குப் புளி கரைக்க ஊற வைக்கும் போது அதை வெந்நீரில் ஊற வைத்தால் அதிகமான சாறு கிடைக்கும்.

• கிரைண்டரில் இட்லி மாவு அரைக்கும் போது அரிசி மாவு சிக்காமல் இருக்க, ஒரு பிடி உளுந்தை  சேர்த்து அரைத்தால்  மாவு அரைக்க சுலபமாக இருக்கும். மாவும் வெண்ணெய்ப்போல் சீக்கிரம் மசிந்துவிடும்.

• கோதுமை மாவு அரைக்கும்போது ஒரு கிலோ  கோதுமைக்கு ஒரு கைப்பிடி அளவு கொண்டைக் கடலையைப் போட்டு அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும். உடலுக்கும் சத்து கிடைக்கும்.

• சாதம் குழைந்து விட்டால் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து, பிறகு சாதத்தை வடித்தால் சாதம் பூப்போல இருக்கும்.

• வெந்தயக் குழம்பை இறக்கும் சமயத்தில் ஒரு தேக்கரண்டி எள்ளுப் போடியைப் போட்டால் குழம்பு மிகவும் வாசனையுடன் இருக்கும்.
-  எம்.ஏ.நிவேதா 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com