85 மொழிகள்....ஒரு கின்னஸ் சாதனை!

பன்னிரண்டு வயதில் 80 மொழிகளில் பாடி அசத்தும் சுசேதா இசை உலகில் ஓர் ஆச்சரியம்..! சுசேதா டிசம்பர் 29-இல்   துபாயில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் 85 மொழிகளில் அடுத்தடுத்துப் பாடி கின்னஸ் சாதனையை நிகழ்த்தவி
85 மொழிகள்....ஒரு கின்னஸ் சாதனை!

பன்னிரண்டு வயதில் 80 மொழிகளில் பாடி அசத்தும் சுசேதா இசை உலகில் ஓர் ஆச்சரியம்..! சுசேதா டிசம்பர் 29-இல்   துபாயில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் 85 மொழிகளில் அடுத்தடுத்துப் பாடி கின்னஸ் சாதனையை நிகழ்த்தவிருக்கிறார்.   இவர் ஓர் இந்தியர் என்பது கூடுதல் சிறப்பு.சுசேதா வசிப்பது துபாயில். துபாய் இந்தியப் பள்ளியில் ஏழாம் வகுப்பில்  படிக்கும் மாணவி. 
"நான்கு வயதில் கர்நாடக இசையையும், எட்டு வயதில் ஹிந்துஸ்தானி இசையையும் கற்றுக் கொண்டேன். தமிழ்,  மலையாளம், ஹிந்தி மொழிகளில் பாடி வந்த எனக்கு பலமொழிப் பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற ஆசை பிறந்தது. எனவே, எனது   இசை உலக எல்லையை விரிவாக்க வேண்டும் என்ற தீவிரம் என்னைத்  துரத்தியது. முதல் முதலாக வெளிநாட்டு  மொழிப் பாடலுக்காகத் தேர்ந்தெடுத்தது ஜப்பான் மொழியை. வீட்டுக்கு வந்த விருந்தினர் ஒருவர் ஜப்பானிய மொழியில்  பாடிய பாடலைக் கேட்டு கவரப்பட்டு அக்ஷர சுத்தமாகப் பாடப் பழகினேன். அடுத்ததாக ஃபிரெஞ்ச், ஹங்கேரி, ஜெர்மன்  மொழிகளில் பாட ஆரம்பித்தேன். ஜெர்மன், ஹங்கேரி மொழிகளில் பாடுவதுதான் மிகவும் சிரமம்.   
 துபாயில் வசிப்பதால் அராபிய மொழியையும் கற்று அராபியப் பாடல்களைப் பாடி வருகிறேன். ஆந்திராவைச் சேர்ந்த    டாக்டர் கேசிராஜு ஸ்ரீனிவாஸ் என்பவர் 2008-இல் 76 மொழிகளில் பாடி கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார். அந்த  சாதனையை முறியடிக்கத்தான் எண்பத்தைந்து மொழிகளில் பாடவுள்ளேன். 
 ஐந்து நிமிடத்தில் என்னால் இருபத்தைந்து மொழி பாடல்களைப் பாட முடியும். இந்த திறமைதான் என்னைப்   பிரபலப்படுத்தியது. சென்ற ஓராண்டு காலமாக விடாமுயற்சியின் பலனாக, என்னால் இப்போது எண்பது மொழிகளில் பாட  முடியும். அடுத்த கட்டமாக இன்னும் ஐந்து மொழிகளில் பாடி எண்ணிக்கையை எண்பத்தைந்தாக உயர்த்தி கின்னஸ் சாதனை புரிய வேண்டும் என்பதுதான் என் லட்சியம்'' என்று சொல்லும் சுசேதா கேரளத்தைச் சேர்ந்தவர். அப்பா சதீஷ் துபாயில் தோல் மருத்துவராகப் பணி புரிகிறார். அம்மா சுமிதா.  
"துபாயில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏராளம் பேர் பணி புரிகிறார்கள். அதனால் பிலிப்பைன்ஸ் நாட்டு  மொழியில் பாடக் கற்றுக் கொண்டேன். அதனால் பிலிப்பைன்ஸ் மக்களிடமும் பரிச்சயமானேன். பிறகு படிப்படியாக   இரண்டு வாரத்தில் மூன்று மொழிகள் என்ற கணக்கில் எண்பது மொழிகளில் பாடக் கற்றுக் கொண்டேன். 
 துபாய்  ஒரு பன்னாட்டு பலகணி. உலகின் பெரும்பாலான நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழ்கிறார்கள். அதனால் பிற  மொழி தெரிந்தவர்களிடம் உச்சரிப்புகளை சரி செய்து கொண்டேன். பாடல்களின் அர்த்தத்தையும் தெரிந்து கொள்வேன்.  அப்போதுதான் பிறநாட்டு மொழிப் பாடல்களை உணர்ச்சி பூர்வமாகப் பாட முடியும். ஒரு பாடலை அதன் நீளத்தைப்  பொறுத்து அரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரத்துக்குள் பாடத் தயாராகி விடுவேன். ஜெர்மன், ஹங்கேரி   மொழியில் பாட மட்டும் இரண்டு மூன்று நாள்கள் தேவைப்பட்டன. 
 வழக்கிலிருந்து அழிந்து வரும் நியூஸிலாந்தின் ஆதிவாசிகளின் மொழியான "மயோரி' யில் பாடப்படும் பாடல் மிக  இனிமையானது. இந்தப் பாடலைப் பாடலாம் என்று தேர்ந்தெடுத்ததும், மீண்டும் மீண்டும் கேட்டு மனப்பாடம் செய்து  கொண்டேன். பாடல்களின் சொற்களை எழுதி வைத்து பாடுவதில்லை. நான் பாடும் பாடல்களில் பாப், ஹிப்-ஹாப் ,  நாட்டுப்புறப் பாடல்களும் அடங்கும். அதனால் எனது இசை நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு அலுப்பு தட்டாது.  துபாய் நாட்டில் பல விருதுகள் பாடும் திறமைக்காகவும், சரியான உச்சரிப்புக்காகவும் பெற்றுள்ளேன். எனக்குப் பிடித்த  பாடகிகள் லதா மங்கேஸ்கர் மற்றும் úஷ்ரயோ கோஷல். பலமொழிப் பாடல்களைப் பாடுவதில் எனக்கு அதீத ஆர்வம்   என்றாலும், அப்பா மாதிரி டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள்'' என்கிறார் சுசேதா.
- சுதந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com