கூடாது!கூடாது!!

நெய் குளிர்ச்சியையும், தேன் சூட்டையும் தருகிறது. இரண்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. 
கூடாது!கூடாது!!

டிப்ஸ்... டிப்ஸ்...
* பாலுடன் உப்பை உட்கொள்ளக் கூடாது.

* "முருங்கைக் கீரை வெந்து கெட்டது. அகத்திக் கீரை வேகாமல் கெட்டது' என்பது பழமொழி. அதிகமாக வெந்த முருங்கைக் கீரையையும், வேகாத அகத்திக் கீரையையும் சாப்பிடக் கூடாது.

* பழங்கள் விரைவாக செரிமானம் ஆகும்; பால் உணவுகள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே இரண்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. 

* நெய் குளிர்ச்சியையும், தேன் சூட்டையும் தருகிறது. இரண்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. 

* அகத்திக் கீரை மருந்தின் வீரியத்தைக் குறைக்கும். எனவே, மருந்து உட்கொள்ளும்போது அகத்திக் கீரையைச் சாப்பிடக் கூடாது.

* வாழைப்பழத்தை தயிர், மோர் இவற்றுடன் சாப்பிடக் கூடாது.

* பழங்கள் சாப்பிடும் போது உருளைக்கிழங்கு, சீஸ், வறுத்த உணவுகள் போன்ற மாவு வகை உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது. 

* வைட்டமின் "சி' சத்துள்ள பழங்களுடன் ஐஸ்கிரீமை சேர்த்து சாப்பிடக் கூடாது.

* பழங்களைத் தனியாகச் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

* மாதவிலக்கின் போது கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com