தோல் பளபளக்க

காய்ச்சிய பசும்பாலில் தேன், மஞ்சள் தூள், குங்குமப் பூ, கற்கண்டு இவைகளைச் சேர்த்து இரவு படுக்கைக்கு போகுமுன் குடிக்க வேண்டும்.
தோல் பளபளக்க

* பொன்னாங்கண்ணி கீரையைப் பருப்புடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும்.

* ஆரஞ்சை பழமாகவோ, பழச்சாறாகவோ அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* காய்ச்சிய பசும்பாலில் தேன், மஞ்சள் தூள், குங்குமப் பூ, கற்கண்டு இவைகளைச் சேர்த்து இரவு படுக்கைக்கு போகுமுன் குடிக்க வேண்டும்.

* காலை உணவுடன் பச்சை வேர்க்கடலையையும் வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* எலுமிச்சம் சாறு, தேன், பன்னீர், பாலாடை ஆகியவற்றை சமஅளவு சேர்த்து குழைத்துத் தடவி, உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

* பாசிப்பயிறு மாவுடன் எலுமிச்சம் பழச்சாறைக் கலந்து குழைத்து தடவ வேண்டும்.

* முட்டையின் வெள்ளைக் கருவுடன் தேன் கலந்து உடம்பில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
"இனிய வாழ்க்கைக்கு 200 கை மருத்துவக் குறிப்புகள்' 
என்ற நூலிலிருந்து
- கே.பிரபாவதி, நெ.இராமன், 
இரா.கோவிந்தம்மாள், 
சி.பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com