தங்கப் பதக்கத்தை திருமண பரிசாக அளிப்பேன்! சைக்கோம் மீராபாய் சானு

இந்திய பளு தூக்கும் வீராங்கனை சைக்கோம் மீராபாய் சானு அமெரிக்காவின் கலிஃபோர்னியா நோக்கி இரண்டு வாரங்களுக்கு முன் பயணம் செய்தபோது பெரிய பாரம் அவரை அழுத்திக் கொண்டிருந்தது
தங்கப் பதக்கத்தை திருமண பரிசாக அளிப்பேன்! சைக்கோம் மீராபாய் சானு

இந்திய பளு தூக்கும் வீராங்கனை சைக்கோம் மீராபாய் சானு அமெரிக்காவின் கலிஃபோர்னியா நோக்கி இரண்டு வாரங்களுக்கு முன் பயணம் செய்தபோது பெரிய பாரம் அவரை அழுத்திக் கொண்டிருந்தது. ஆமாம்! நவம்பர் 22-இல் நடந்த தமக்கையின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற மனக்குறைதான். ஆனால் அந்த மனக்குறை உலக பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதன் மூலம் மனம் லேசாக ஆகியுள்ளது.
 1995-இல் கர்ணம் மல்லேஸ்வரி மூலமாகக் கிடைத்தத் தங்கப் பதக்கம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு 23 வயதாகும் சானு மூலம் மீண்டும் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.
 "எனது தமக்கை சாயாவின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற தர்மசங்கடம் என்னைப் பாடாய்ப்படுத்தியது. நவம்பர் 22-இல் அக்காவின் திருமணம். நான் நவம்பர் 12-ஆம் தேதி புறப்பட வேண்டும். வீட்டில் அனைவரும் என் நிலைமையைப் புரிந்து கொண்டாலும் மற்றவர்கள், "சகோதரி திருமணத்தைவிட விளையாட்டு முக்கியமா?' என்று விமர்சனம் செய்தனர்.
 ""போட்டியில் வெற்றி பெற்று திரும்புவேன். கிடைக்கும் தங்கப் பதக்கத்தை தமைக்கையின் திருமணப் பரிசாகத் தருவேன்'' என்று சொல்லித்தான் புறப்பட்டேன். நான் சொன்னது பலித்திருக்கிறது. இதைவிட பொருத்தமான திருமணப் பரிசு என் சகோதரிக்கு வேறு இருக்க முடியாதல்லவா?'' என்கிறார் சானு.
 - பிஸ்மி பரிணாமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com