தடகளத்தில் தடம் பதிக்கும் மாணவி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஓராண்டில் சுமார் 10 மாதங்கள் கடுமையான குளிர்காற்று வீசும் சீதோஷண நிலை காணப்படும்.
தடகளத்தில் தடம் பதிக்கும் மாணவி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஓராண்டில் சுமார் 10 மாதங்கள் கடுமையான குளிர்காற்று வீசும் சீதோஷண நிலை காணப்படும். அதிகாலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் வீசும் குளிர் காற்றில் சாதாரணமாக வீட்டில் இருந்தாலே உடல் முழுவதும் நடுங்கும். 
இப்படிப்பட்ட பருவ சூழ்நிலையில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மகளை தினமும் ஒசூர் அந்திவாடி விளையாட்டு மைதானத்துக்கு காலை, மாலை இருவேளைகளிலும் அழைத்துச் சென்று பயிற்சி அளித்து வட்ட, மாவட்ட, மண்டல, மாநில, தென்னிந்திய மற்றும் தேசிய அளவில் தடகளப் போட்டிகளில் தடம் பதிக்க வைத்துள்ளார் ஒரு தொழிலாளி. அதுவும் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் விûளாட்டுகளில். இவ்விரு விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார் ஜென்சி சூசன். 
ஒசூர் சாந்தி நகரில் விசித்து வருகிறார் அகஸ்டியன் ஜெபராஜ் (45). பூர்வீகம் திருநெல்வேலி. வேலை தேடி ஒசூர் வந்த இவர் முதல் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழில்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மனைவி ஜான்சி கெட்சி. இவர் தனியார் பள்ளி ஆசிரியையாக இருக்கிறார். இவர்களுக்கு ஜெனிடன் என்ற மகனும்(17), ஜென்சி சூசன்(15) என்ற மகளும் உள்ளனர். ஜென்சி தேசிய அளவில் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். 
ஒசூர் பரிமளம் மெட்ரிக் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் ஜென்சி சூசனின் உடல் வாகைப் பார்த்த உடற்பயிற்சி ஆசிரியர் அசோக், குண்டு எறிதல் விளையாட்டில் முறையாக பயிற்சி அளித்தால் ஜென்சி சாதனைப் படைப்பார் என்று கணித்தார். பள்ளியின் நிர்வாக இயக்குநர் ரத்தினசபாபதி, தாளாளர் ஸ்ரீதர் ஆகியோர் ஜென்சிக்கு முறையாக பயிற்சி அளிக்க அனுமதி அளித்தனர்.
இந்தப் பயிற்சியை மேற்கொள்ளத் தான் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 5 முதல் 7 மணி வரையில் தீவிரப் பயிற்சி எடுத்து வந்தார் ஜென்சி. 
இது குறித்து ஜென்சி கூறுகையில்,"கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் 2016 -2017-ஆம் ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தேன். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒசூர் சரக அளவில் நடைபெற்ற போட்டியிலும், மாவட்ட அளவில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற போட்டியிலும், மண்டல அளவில் தருமபுரியில் நடைபெற்ற போட்டியிலும் குண்டு மற்றும் வட்டு எறிதல் பிரிவில் முதலிடம் பெற்றேன். அதன் பின்பு மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வானேன்.
அக்டோபர் மாதம் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவில் குண்டு எறிதல் போட்டியில் 11.34 மீட்டர் தொலைவும், வட்டு எறிதலில் 37.44 மீட்டர் தொலைவும் வீசி முந்தைய சாதனைகளை முறியடித்தேன்.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகி 13.38 மீட்டர் குண்டு எறிந்து முதலிடம் பிடித்தேன். இதனால் தேசிய அளவில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது. 
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் அண்மையில் நடைபெற்ற 63-ஆவது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியிலும் இரண்டு விளையாட்டிலும் முதல் இடத்தைப் பிடித்தேன்.
எனது வெற்றிக்கு எனது தந்தையின் விடாமுயற்சியும், உடற்பயிற்சி ஆசிரியர் அசோக்குமார் அளித்த ஊக்கமும்தான் முக்கிய காரணம். இன்னும் பல சாதனைகளைப் படைத்து பள்ளிக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இதுவே என் ஆசை'' என்கிறார் ஜென்சி. 
- த.ஞானப்பிரகாசம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com