எளிய மருத்துவம்!

அகத்திக் கீரையைப் பச்சையாக மென்று தின்றாலே வாய்ப்புண், தொண்டை வலி நீங்கிவிடும்.
எளிய மருத்துவம்!

* அகத்திக் கீரையைப் பச்சையாக மென்று தின்றாலே வாய்ப்புண், தொண்டை வலி நீங்கிவிடும்.

* பித்தத்தை  உண்டு பண்ணுமாதலால் பித்த நோயாளிகள் கொத்தவரங்காய் சாப்பிடக் கூடாது.

* தோல் சம்பந்தமான நோயுள்ளவர்கள் மொச்சையை  உண்ணக் கூடாது.

* உடல் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்வதால் உஷ்ண வியாதியுள்ளவர்கள் கத்தரிக்காய் சாப்பிடக் கூடாது.

* ஜீரண சக்தியைக் குறைப்பதால் பலாக்காயை வயிற்று நோயுள்ளவர்கள் சாப்பிடக் கூடாது.
 - நெ.இராமன்

* சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொண்டு தினமும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீரில்  ஒரு ஸ்பூன் வறுத்த சீரகப் பொடியைக் கலந்து குடித்து வந்தால் வாயுக் கோளாறு எதுவும் வராது.
- பி.பாலாஜிகணேஷ்

* இரவு படுக்கும் முன் வெது வெதுப்பான வெந்நீர் குடித்தால் மலச்சிக்கலே இருக்காது.

* மாதவிலக்கின்போது ஏற்படும் பல விதமான கோளாறுகளுக்கு இலந்தைப்பூ, வெற்றிலை, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டால் மாத விலக்கின் போது எந்த சிக்கலும் இருக்காது. 
- பி.கவிதா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com