டிப்ஸ்... டிப்ஸ்...

மோர்க் குழம்பு செய்யும்போது ஒரு வாழைப் பழத்தை நன்கு மசித்து சேர்த்துக் கொண்டால் சூப்பராக இருக்கும்.
டிப்ஸ்... டிப்ஸ்...

* மோர்க் குழம்பு செய்யும்போது ஒரு வாழைப் பழத்தை நன்கு மசித்து சேர்த்துக் கொண்டால் சூப்பராக இருக்கும்.

* வெஜிடபிள் கட்லெட் செய்யும்போது, சிறிதளவு சாதத்தை நன்கு மசித்து, சேர்த்துப் பிசைந்து கட்லெட்  செய்தால் சாஃப்டாக இருக்கும். மேலும் அளவும் கூடுதலாக இருக்கும்.

* உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தனியா, மிளகாய்வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை இவைகளை வறுத்து சிறிது உப்பு சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பட்டாணி அல்லது கொண்டைக் கடலை சுண்டல் செய்யும் போது இந்தப் பொடியைச் சிறிது தூவினால் ருசி கூடும்.

* கத்தரிக்காய், சௌசௌ, தக்காளி, வெள்ளைப் பூசணி எல்லாவற்றையுமே நறுக்கிப் போட்டு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வேக விடவும். வெந்ததும் மசித்து கடுகு, உளுந்து,  பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். பருப்பே இல்லாத மசியல் டேஸ்ட்டாக இருக்கும்.

* சப்பாத்தி மீந்து போனால் வெயிலில் நன்றாகக் காய வைத்து நொறுக்கிக் கொள்ளவும். தகுந்த வெல்லப்பாகுச் சேர்த்து இறக்கி, அதில் சப்பாத்தி  தூளைக் கொட்டி ஏலம், சுக்கு தட்டிப் போட்டுக் கிளறி, சற்று ஆறியதும் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

* ரவா இட்லிக்கு ரவையை ஊற வைக்கும் போது அதனுடன் சிறிது வறுத்த சேமியாவும் தயிரும் சிறிது சேர்த்துக் கொண்டால் இட்லி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

* சுண்டைக்காய் வற்றலை மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும். சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் மசாலா பவுடருடன் அரை தேக்கரண்டி சேர்த்துக் கலக்கி விட்டால் சூப்பர் டேஸ்ட்டில் இருக்கும். சளியும் குணமாகி விடும். 
- அமுதா அசோக்ராஜா 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com