பாயும் ஒளி நீ எனக்கு...!

"மாற்றான்', "அநேகன்' படங்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் எழுதி இயக்கி வரும் படம் "கவண்.' ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்சேதுபதி.
பாயும் ஒளி நீ எனக்கு...!

"மாற்றான்', "அநேகன்' படங்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் எழுதி இயக்கி வரும் படம் "கவண்.' ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்சேதுபதி. மடோனா செபாஸ்டின், பாண்டியராஜன், விக்ராந்த், போஸ் வெங்கட், ஜெகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி.ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். "கனா கண்டேன்' படம் முதல் கே.வி.ஆனந்தோடு பணியாற்றி வரும் இரட்டை எழுத்தாளர்கள் சுபா இப்படத்திலும் பங்களித்துள்ளார்கள். இந்த எழுத்து கூட்டணியில் கபிலன் வைரமுத்துவும் புதிதாக இணைந்துள்ளார். ஹிப் ஹாப் தமிழாவின் இசையில் மகாகவி பாரதியாரின் "பாயும் ஒளி நீ எனக்கு...' என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. எளிமையான மனிதர்கள், அதிகாரமிக்கவர்களை எதிர்த்து வெல்வதுதான் படத்தின் திரைக்கதை. படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அருண்ராஜா காமராஜ், கபிலன் வைரமுத்து இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரண் கலை இயக்கத்தில், ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். மார்ச் மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com