சிலிர்க்க வைக்கும் தமிழ் ரசிகர்களின் அன்பு...!

ஜி.வி.பிரகாஷுடன் "புரூஸ் லீ' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் டெல்லியைச் சேர்ந்த கீர்த்தி கர்பந்தா.
சிலிர்க்க வைக்கும் தமிழ் ரசிகர்களின் அன்பு...!

ஜி.வி.பிரகாஷுடன் "புரூஸ் லீ' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் டெல்லியைச் சேர்ந்த கீர்த்தி கர்பந்தா. கோலிவுட்டுக்கு வந்திருக்கும் இந்த அழகுப் புயலிடம் நலம் விசாரித்தால், தமிழிலேயே "வணக்கம்...' வைக்கிறார். 
வழக்கம் போல நீங்களும் ஆக்ஸிடென்ட்டாதான் நடிக்க வந்தீங்களா...?
மற்றவர்கள் எப்படியோ, நான் நடிக்க வந்தது உண்மையிலேயே ஆக்ஸிடென்ட்தான். சின்ன வயசுல இருந்தே படிப்பது, எழுதுவது, ஸ்கூல், காலேஜ் மேடை நாடகங்களில் நடிக்கிறதென எப்போதும் பிஸி. செய்தி விளம்பரங்களில் நிறைய போஸ் கொடுத்திருக்கிறேன். அந்த போட்டோக்களைப் பார்த்துதான் "பிரகதி' என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படியே பரபரன்னு தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அடுத்தடுத்து பயணங்கள் அமைந்தது. இப்போதுதான் தமிழுக்கு வந்திருக்கிறேன். நல்ல கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என நினைக்கிறேன். நான்கு படங்கள் நடித்தாலும் நல்ல நடிகை என்று பெயர் வாங்க வேண்டும். அதுதான் என் இலக்கு. 
தமிழ் சினிமா ரசிகர்களை கவனித்தீர்களா...?
கவனித்தேன். நல்ல ரசிகர்கள். நடிகர், நடிகைகள் மேல இவ்வளவு வெறித்தனமான அன்பு வைத்திருப்பதைப் பார்த்தால், சந்தோஷமாக இருக்கிறது. ஜாதி, மதம், மாநிலம் கடந்து இவர்கள் காட்டுகிற அன்பு சில நேரங்களில் சிலிர்க்க வைக்கும். வேறு எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட ரசிகர்களை பார்க்க முடியாது. அவர்கள் தங்களின் ஹீரோ, ஹீரோயின்களை நேசிக்க எதாவது ஒரு காரணம் இருக்கும். ஆனால் இங்கு அப்படியில்லை. பிடித்திருந்தால் போதும். என்னையும்  இவர்கள் கொண்டாட வேண்டும். 
இதுவரைக்கும் வெளிவந்த ஸ்டில்களில் கவர்ச்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் தந்திருக்கீங்க...?
"புரூஸ் லீ' கதைக் களம் அப்படியானது. அதுவுமில்லாமல் நான் மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவள். அதனால் என்னிடம் கவர்ச்சி அளவுக்கு அதிகமாகவே இருக்கும். ஒரு வகையில் இது எனக்கு ப்ளஸ். 
நடிப்பு தவிர...
இப்போதைக்கு நடிப்பு மட்டும்தான். தமிழ் சினிமாவில் நல்ல பெயர் வாங்க வேண்டும். அவ்வளவுதான். கலீல் ஜிப்ரான், அயன் ராண்ட் என்னோட ஃபேவரைட் எழுத்தாளார்கள். போட்டோ கிராஃபியும் ரொம்பப் பிடிக்கும். நானும் நிறைய கவிதைகள் எழுதுவேன். 
தமிழில் யார் கூட நடிக்க ஆசை...
சூர்யாதான். அவர் கூட ஒரு படம் நடிக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com