தமிழில்...

"காட்ஸ் ஆப் ஈஜிப்ட்', "பேட்மேன்  சூப்பர்மேன்', "மேகானிக் - ரீசரக்ஷன்' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களையும் "பாகி', "அசார்', "உத்டா பஞ்சாப்',
தமிழில்...

"காட்ஸ் ஆப் ஈஜிப்ட்', "பேட்மேன்  சூப்பர்மேன்', "மேகானிக் - ரீசரக்ஷன்' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களையும் "பாகி', "அசார்', "உத்டா பஞ்சாப்', "ருஸ்தம்' உள்ளிட்ட ஹிந்தி படங்களையும் விநியோகம் செய்த இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் சஞ்சய் குப்தா இயக்கத்தில் உருவான "பலம்' படத்தை தமிழில் வெளியிடுகிறது. "காபில்' என்ற பெயரில் ஹிந்தியில் உருவான இப்படத்தின் தமிழ்ப் பதிப்பாக இப்படம் வெளியாகவுள்ளது. 31 வயதான பின்னணி குரல் கலைஞர் ரோஹன் தனது பெரும்பான்மையான வாழ்க்கையை ஸ்டுடியோக்களிலேயே கழிக்கிறார். பிறப்பிலேயே பார்வையற்ற ரோஹனுக்கு ஒரு தருணத்தில் சுப்ரியாவை சந்திக்கிறான்.  அவள் மீது காதல் வயப்படுகிறான். சுப்ரியாவின் பிரிவு ரோஹனின் வாழ்க்கையை மேலும் தனிமைப்படுத்துகிறது. சுப்ரியா பிரிவின் காரணத்தை ஆராய முற்படும் ரோஹனுக்கு, தன்னை சுப்ரியா பிரிந்ததற்கான உண்மை புலப்படுகிறது. தன்னை தனிமைப் படுத்தியவர்களுக்கெதிரான யுத்தத்தில்  ஈடுபடுகிறான். பின் நடந்தது என்ன என்பதே கதை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com