பருப்புகளை சாப்பிட மறக்காதீர்கள்!

பருப்புகளை சாப்பிட மறக்காதீர்கள்!

தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை... முந்திரிப் பருப்பு... பாதாம் பருப்பு உள்பட பல பருப்புகளை எடுத்து சாப்பிட்டு உடலையும், ஆயுளையும் நீடித்துக் கொள்ளுங்கள்.

தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை... முந்திரிப் பருப்பு... பாதாம் பருப்பு உள்பட பல பருப்புகளை எடுத்து சாப்பிட்டு உடலையும், ஆயுளையும் நீடித்துக் கொள்ளுங்கள். இந்த பருப்புகள் கொழுப்பு கொண்டவை என சிலர் கூறக்கூடும்; ஆனால் அவற்றில் நன்மைகளும் அதிகம்.
டைப் - 2: சர்க்கரை நோயை விரட்டும்
இந்தியாவில் 69.2 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இதனை 40 சதவிகிதம் குறைத்துவிட முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மேற்கூறிய பருப்புகளை சாப்பிட வேண்டியதுதான். 160 கலோரி கொண்ட பாதாம் பருப்பு சாப்பிட்டால் அதில் 6 கிராம் புரோட்டின் மற்றும் 4 கிராம் ஃபைபர் சத்து உள்ளது. இதன் மூலம் ரத்தத்தில் இன்சுலின் சுரந்து உதவுகிறது. இதுதவிர வைட்டமின் இ; காப்பர், மேக்னடிசம் ஆகியவையும் இதில் உள்ளன. இவற்றின் மூலம் வியாதிகளைத் தூண்டும் காரணிகளை அழித்துவிடலாம்.
டிப்ஸ்: பாதாம் பருப்பை தண்ணீரில் போட்டு இரவு ஊற வைத்து, காலையில் எடுத்துச் சாப்பிடுவது நல்லது. அதிலுள்ள அமிலங்கள் கழிவை அகற்றி ஊட்டச்சத்தைக் கூட்டும்!
ஊளைச் சதையைக் குறைக்கும்
வேர்க்கடலையில் கொழுப்பு அதிகம். அதேசமயம் நார்ச்சத்தும் அதிகம். இதனால் அதனை உட்கொள்ளும்போது ஊளைச்சதையைத் திட்டமிட்டு குறைத்துவிடும். உயர் கொலஸ்டிராலைச் சமாளிக்க ஒரே வழி; வாதுமை கொட்டைகளைச் சாப்பிடுவதுதான்!
இருதயம் சார்ந்த ஆரோக்கியத்திற்கு வாதுமை பருப்பு மிகவும் அவசியம்.
இதில் புரோட்டின், ஃபைபர், மேக்னடிசம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம். இவற்றின் மூலம் உடல் கொழுப்பைக் குறைத்துவிட இயலும்.
டிப்ஸ்: வாதுமை பருப்பு எளிதில் கெட்டுவிடும்! ஆக... இதனை இரவு ஊற வைத்து (தண்ணீரில்) காலையில் எடுத்துச் சாப்பிட்டுவிட வேண்டும்! அதுவே நல்லது!
கேன்சரை புறம் தள்ளும்
தினமும் பலவிதமான பருப்புகளைச் சாப்பிடுவது புற்றுநோய் உடலில் ஏற்படுவதை 15 சதவிகிதம் குறைத்துவிடும் என கண்டுபிடித்துள்ளனர்! ‘Pecans’ என்ற பருப்பை வாங்கிச் சாப்பிட வேண்டும். இதில் வைட்டமின் - ஈ சத்து அதிகம். குறிப்பாக இது ப்ரோஸ்டேட் கேன்சருக்கு ரொம்ப நல்லது. இதில் உள்ள அமிலங்கள், புற்றுநோயைத் தூண்டும் காரணிகளை மழுங்கச் செய்து விடும்!
டிப்ஸ்: வேலைப்பளு - அழுத்தம் இல்லாமல் தொடர்ந்து சுறுசுறுப்பாக வாழ இந்த "pecan' பருப்பு ரொம்ப அவசியமாகும்!
இளம் வயதிலேயே முதுமைத் தோற்றமா?
மேற்கூறிய பருப்புகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், வாழ்நாளை கூட்டுவதுடன், முதுமையை விரட்டி, உடலைத் தொடர்ந்து இளமையாக வைத்துக்கொள்ள உதவும் என்கிறது ஓர் ஆய்வு.
வேர்க்கடலையில் புரோட்டின் மற்றும் வைட்டமின் - பி சத்து அதிகம். அத்துடன் உடலில் ஏற்கெனவே சேர்ந்துள்ள கொழுப்புகளையும் எரித்துவிடும்!
டிப்ஸ்: வேர்க்கடலையின் பயனை முழுமையாய் அனுபவிக்க வேண்டுமா? வறுத்தோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டால் போதும்! ஆனால் அளவாகச் சாப்பிடவும்!
அதிகப்படியான அழுத்தத்தைக் குறைக்கும்
இந்திய ஜனத்தொகையில் 20 - 40 சதவிகிதம் பேரை, உயர் அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தம் பாதிக்கிறது. இந்த இரண்டையும் குறைக்க பொட்டாசியம் கூடுதலாகக் கொண்ட நார் மற்றும் மேக்னடிசம் கொண்ட பதார்த்தங்களை அதிகம் சாப்பிட வேண்டும்! அதேசமயம் சோடியம் கூடுதலாகக் கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
இவற்றின் மூலம் நல்ல தூக்கம், ரத்த அழுத்தம், தகைவை (Stress) சமாளிக்கும் திறனும் உண்டாகும்!
இதற்கு நீங்கள் சாப்பிட வேண்டியது பிஸ்தா! இது திண்பண்டத்தில் சுவையைக் கூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும். இனிய சுவையுடைய பச்சை நிறப் பருப்பை கொண்டது! இதனை உப்பு கலக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது!
இளமை இன்மைக்கு எதிராகப் போராடும்
வாதுமை கொ ட்டை சாப்பிடுவதால், ஒமேகா, கொழுப்பு; அமிலங்கள் வைட்டமின் E-B ஆகியவை உடலில் சேரும். இவை நமது உடலில் பலத்தைக் கூட்டி, இளமை இன்மைக்கு எதிராகச் செயல்படும். இதன் மூலம் தாது உற்பத்தி மேம்படும்!
டிப்ஸ்: தினமும் வாதுமை பருப்பை பச்சையாகவும் முழுமையாகவும் சாப்பிடவும்!
மனத்தளர்ச்சிக்கு எதிராகப் போராடும்!
பலவகை கடலை; பருப்புகளைச் சாப்பிடுவதால், ஒமேகா-3; அடர் அமிலங்கள் உற்பத்தியாகும். இது மூளைக்கு நல்லது. இதனால் உங்கள் மூடு மாறும் அல்லது மாற்றும்! முந்திரிப்பருப்பில் "சிங்க்' (ZINC) அதிகம். இதுவும் கவலை மற்றும் தளர்ச்சியை விரட்டும்! நமது உடலுக்கு "சிங்க்'கை சேர்த்து வைக்கும் வசதி இல்லை. ஆக முந்திரிப்பருப்பு தினமும் சாப்பிடுவது நல்லது.
டிப்ஸ்: முந்திரியை வறுத்துச் சாப்பிட்டால் ரொம்ப நல்லது!
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com