இளமை தோற்றத்தை பாதுகாக்க!

இளம் வயதிலேயே சிலர் முதுமையான தோற்றத்தில் காணப்படுவார்கள். இப்படி காட்சியளிப்பதற்கு சரும பராமரிப்புகளும், மாசு நிறைந்த சுற்றுச்சூழலும்,
இளமை தோற்றத்தை பாதுகாக்க!

இளம் வயதிலேயே சிலர் முதுமையான தோற்றத்தில் காணப்படுவார்கள். இப்படி காட்சியளிப்பதற்கு சரும பராமரிப்புகளும், மாசு நிறைந்த சுற்றுச்சூழலும், உணவு, பழக்க வழக்கங்களும்தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன. 
அதிலிருந்து சருமத்தைப் பராமரித்து இளமைத் தோற்றத்தைப் பாதுகாக்க சில எளிய வழிகள்:
ஆரஞ்சு மற்றும் தேன்
ஆரஞ்சு ஜூஸில் சிறிது தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை கலந்து, பின் அதனை முகத்தில் தடவி 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டுமுறை இப்படி செய்துவர, ஆரஞ்சு ஜூஸில் உள்ள வைட்டமின் சி சத்தானது பாதிப்படைந்த செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். 
தக்காளி
தக்காளி சாற்றினை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து கழுவி வந்தால், அது சருமத்திற்கு தேவையான வைட்டமின் சி, ஏ மற்றும் கே சத்துக்களை வழங்கி, சருமத்தை பொலிவோடும் அழகாகவும் வைத்துக் கொள்ளும். மேலும் உணவிலும் தக்காளியை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை தினமும் முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், சருமத்தில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.
தேன் 
கடலை மாவுடன் தேன் சேர்த்து குழைத்து சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது வறட்சியுடனும், மென்மையிழந்து காணப்படும் சருமத்திற்கு நல்ல பலனைத் தரும்.  
வெள்ளரிக்காய் 
வெள்ளரிக்காய் துண்டுகள் சரும செல்களை தூண்டி, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். எனவே தினமும் வெள்ளரிக்காயை அரைத்து விழுதாக்கி முகத்தில் தடவலாம். அல்லது வெள்ளரிக்காய் துண்டுகளை கண்கள் மற்றும் முகத்தில் 20 நிமிடம் வைத்திருந்தால், முகம் பளிச்சென்று இருக்கும். 
ஃபுரூட் ஃபேஷியல்
பாதி ஆப்பிளை நறுக்கி, அத்துடன் 5 ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து நன்கு அரைத்து, அதில் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள், முதுமை கோடுகள் மறைந்து, முகம் சுத்தமாக அழகாக காணப்படும்.
- ரிஷி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com