சீரியல்கள் இயக்க வேண்டும்

"பிறந்தது, வளர்ந்ததெல்லாம் தர்மபுரியில்தான். அப்பா அரசு பள்ளி ஆசிரியர், அம்மா குடும்பத்தலைவி. என்னோடு சேர்த்து எங்க வீட்ல மொத்தம் 5 பெண்கள்.
சீரியல்கள் இயக்க வேண்டும்

நியூஸ் 7 தொலைக்காட்சியில் சூப்பர் ஹவுஸ் புல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருபவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் அமுரூத். அவருடன் பேசினோம்:
"பிறந்தது, வளர்ந்ததெல்லாம் தர்மபுரியில்தான். அப்பா அரசு பள்ளி ஆசிரியர், அம்மா குடும்பத்தலைவி. என்னோடு சேர்த்து எங்க வீட்ல மொத்தம் 5 பெண்கள். நான் 3-ஆவது பெண். அக்கா இரண்டு பேருக்கும் திருமணம் முடித்து சென்னை வந்து செட்டில் ஆனாங்க. அதன்பிறகு நாங்களும் சென்னை வந்துவிட்டோம்.

படிக்கிற காலத்திலிருந்தே எல்லாரிடமும் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பேசுவது போன்று பேசிப்பேசி காண்பிப்பேன்.

ப்ரென்ட்ஸ் எல்லாம் "நீ நல்லா பேசுறடி டிவியில் சேர்ந்துடு' என்று சொல்வார்கள். அவர்கள் விளையாட்டாக சொன்னது எனக்கு மனதில் அப்படியே பதிந்துவிட்டது. அதனால் வேலைக்கு போவதென்றால், டிவியில் தான் வேலை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

அதன்பிறகு, கல்லூரி படித்துக் கொண்டிருக்கும்போது இசையருவி தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான ஆடிஷன் நடப்பதாக ஸ்க்ரோலில் போய் கொண்டிருந்தது. அதை பார்த்துவிட்டு ஆடிசனில் கலந்து கொண்டேன்.

அதன் மூலம் 2010- இல் இசையருவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்து வேலைக்கு சேர்ந்தேன். நான்கு ஆண்டுகள் அங்கேதான் பணி புரிந்தேன். அதன்பிறகு திருமணம். என் கணவர் தீபக்கை லவ் மேரேஜ் செய்து கொண்டேன். அவரும் மீடியாவில்தான் இருக்கிறார்.

அதன்பிறகு, ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொண்டு மீண்டும், வேந்தர் தொலைக்காட்சியில் ஓராண்டு வேலை பார்த்தேன். அப்போதுதான் செய்தி வாசிக்க வேண்டும் என்று ஆசை வந்ததது. செய்தி வாசிப்பாளருக்கான பயிற்சியும் எடுத்துக் கொண்டேன்.

அந்த சமயத்தில் நியூஸ் 7 சேனலில் வாய்ப்பு கிடைத்தது. அவ்வப்போது செய்தி வாசிப்பும் செய்வேன். செலிபரிட்டி பேட்டி, விழாக்கால நிகழ்ச்சி தொகுப்பு, நிகழ்ச்சி தொகுப்பு போன்றவற்றை செய்து வருகிறேன். தற்போது சூப்பர் ஹவுஸ்புல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை நேரடி ஒளிப்பரப்பு நிகழ்ச்சி, புது டிரண்டில் உள்ள சினிமா செய்திகள், சமீபத்தில் என்ன படங்கள் ஓடிட்டிருக்கு என்பது போன்று இருக்கும். அதற்கான ஸ்கிரிப்பட்டை நானே தயார் செய்துவிடுவேன். முடிவில் புதுசாக ஓடிக்கொண்டிருக்கும் சினிமாவுக்கு டிக்கெட்டும் இலவசமாக வழங்கப்படும்.
ப்யூச்சரில் வெப் டிவி சீரியல்கள் இயக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளது.
- ஸ்ரீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com