பன்னிரண்டு வயதில் தொழில் அதிபர்!

மிகைலா உல்மர் அமெரிக்காவை சேர்ந்தவர். பன்னிரண்டு வயதாகும் மிகைலா பழச்சாறு விற்பனையின் மூலம் மிகப் பெரிய தொழில் அதிபராக மாறியிருக்கிறார்.
பன்னிரண்டு வயதில் தொழில் அதிபர்!

மிகைலா உல்மர் அமெரிக்காவை சேர்ந்தவர். பன்னிரண்டு வயதாகும் மிகைலா பழச்சாறு விற்பனையின் மூலம் மிகப் பெரிய தொழில் அதிபராக மாறியிருக்கிறார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த மிகைலா உல்மர், காட்டுத் தேன் கலந்த எலுமிச்சை பழச்சாறு தயாரிக்கும் "மீ அண்ட் தி. பீஸ் லெமனேட்' என்ற நிறுவனத்தின் தலைவராக செயல்படுகிறார்.

தேனடைகளில் நேரடியாக எடுக்கப்படும் தேனுடன் புதினா, ஆளிவிதைகள் (ஃபிளக்ஸ் விதைகள்), எலுமிச்சை ச்சாறு ஆகியவற்றை கலந்து "பீ ஸ்வீட் லெமனேட்' என்ற பெயரில் இயற்கை பானத்தை தயாரித்து மிகப் பெரியளவில் அமெரிக்காவில் விற்பனை செய்து வருகிறார்.

அமெரிக்காவில் பல இடங்களில் கிளைகளைக் கொண்டிருக்கும் "ஹோல் புட்ஸ்' என்ற சிறப்பங்காடி நிறுவனம் தனது ஐம்பத்தைந்து வர்த்தக நிலையங்களில் மிகை லாவின் "பீ ஸ்வீட் லெமனேட்' பா னத்தை விற்பனை செய்கிறது. " பீ ஸ்வீட் லெமனேட்' விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மிகைலாவின் திறமையைக் கண்டு மிகைலாவின் நிறுவனத்தில் தொழில் அதிபர் ஒருவர் முதலீடு செய்துள்ளார்.

மிகைலாவின் பாட்டி இந்த பானத்தை வீட்டில் தயாரித்து வந்துள்ளார். மிகவும் சுவையான அந்த இயற்கை பானத் தயாரிப்பின் முறையைத் தெரிந்து கொண்ட மிகைலா, பெரிய அளவில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கோடி கோடியாக சம்பாதிக்கிறார். சம்பாதிப்பதில் ஒரு பகுதியை தேனீக்களைக் காக்கும் சேவையில் ஈடுபட்டிருக்கும் அமைப்பிற்கு பொருளா தார உதவிகளையும் மிகைலா செய்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com