ஷாருக்கானின் மகள் நடிகையாகிறார்..!

ஹிந்திப் படவுலகில் வாரிசு நடிகைகளின் சரியான போட்டி ஆரம்பம் ஆகப் போகிறது.
ஷாருக்கானின் மகள் நடிகையாகிறார்..!

ஹிந்திப் படவுலகில் வாரிசு நடிகைகளின் சரியான போட்டி ஆரம்பம் ஆகப் போகிறது.

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி... சைஃப் அலிகானின் மகள் சாரா நடிகையாக அறிமுகமாகிறார்கள் என்று ஹிந்திப் படவுலகில் செய்திகள் வலம் வந்து கொண்டிருந்தாலும், இவர்களை எல்லாம் ஓவர் டேக் செய்யப்போகிறவர் வேறு யாருமல்ல... சாட்சாத் ஷாருக்கானின் மகள் சுஹானாதான்...! ஷாருக்கானின் மகன் அர்யான் நடிகராக வாய்ப்பிருக்கிறது என்று பேசப்பட்டாலும், மகள் முந்திக் கொண்டிருக்கிறார்.

ஷாருக்கானின் மிக நெருங்கிய நண்பரான கரண் ஜோஹர் இயக்கித் தயாரிக்கும் படத்தில் சுஹானா அறிமுகமாகிறார். சுஹானாவுக்காக தரமான திரைக்கதையை ரெடியாக்கச் சொல்லி சஹானாவின் அம்மா கெளரிகான் பிரத்யேகமாகக் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

"சுஹானா நாடகங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை மெருகு ஏற்றிவருகிறார். சுஹானாவின் நடிப்பைப் பார்த்து பிரபல நடிகை ஷபானா ஆஸ்மி புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இயற்கையாக நடிப்பதில் சுஹானாவை அடித்துக் கொள்ள முடியாது...'' என்று ஷாருக்கானின் நட்பு வட்டாரங்கள் பேசி வருகின்றன.
சுதந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com