டிப்ஸ்... டிப்ஸ்... 

அகத்திக்கீரை, தேங்காய் பத்தை, சீரகம், கஸ்தூரி மஞ்சள் வகைக்கு 100 கிராம் இவற்றை நீர் சேர்த்து விழுதாக அரைத்து, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும்

சோரியாஸிஸ் குணமாக
 அகத்திக்கீரை, தேங்காய் பத்தை, சீரகம், கஸ்தூரி மஞ்சள் வகைக்கு 100 கிராம் இவற்றை நீர் சேர்த்து விழுதாக அரைத்து, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தேய்த்துக் குளித்து வர தோல் நோய்கள், அனைத்தும் விலகும். "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு முறையாக உள்மருந்து எடுத்துக் கொண்டு, இதனை வெளிப் பூச்சாய் பயன் படுத்தி வர, நோயிலிருந்து விரைவில் மீண்டு விடலாம்.

கொசு விரட்டும் தும்பை
 காய்ந்த தும்பையிலை அரை கிலோ, சாம்பிராணி அரைகிலோ அளவில் எடுத்து இரண்டையும் ஒன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் 50 கிராம் ஓம உப்பு, 50கிராம் பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைத் தனித்தனியே தூள் செய்து கலந்து வைக்கவும். இதனைச் சிறிதளவு நெருப்பிலிட புகைவரும். இப்புகைப்பட்ட இடமெல்லாம் கொசு நம்மை அண்டாது.
ஆதாரம் : "பணமே இல்லாமல் பலன் தரும் தெய்வீக மூலிகை மருத்துவம்'
-வெ.அனகா.

கொழுப்பைக் குறைக்க
கொழுப்பைக் குறைக்க வாழைத்தண்டைவிட மேலானது எதுவும் இல்லை. இரத்த அழுத்தம் கூடுதலானவர்களுக்கு மிகவும் சிறந்தது  வாழைத்தண்டு.
- கே. பிரபாவதி

அப்படியா?
* வெள்ளரிக்காயின் தோலைச் சீவிவிட்டு உண்ணாதீர்கள். தோலில்தான் நம் அழகைக் காக்கும் தாது உப்புக்களும் வைட்டமின்களும் அதிகம் உள்ளன.

* கபத்தில் கஷ்டப்படுபவர்கள் கத்திரிக்காயைக் கொஞ்சம் மிளகு சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

* சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர, வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும், ஞாபகசத்தி பெருகும். மூளை பலம் பெறும். பித்தம், மயக்கம், வாந்தி, தலைவலி, அஜீரணம், தோல் வியாதிகள் குணமாகும்.
- ஆர்.மீனாட்சி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com