விளையாட்டில் சாதிக்க கர்ப்பம் தடையல்ல...

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், "நான் ஐந்து மாத கர்ப்பிணி' என்று சமீபத்தில் தனது செல்பி படத்தை சமூக தளத்தில் பதிவேற்றம் செய்து.. சிறிது நேரத்திலேயே அதை நீக்கியும் விட்டார்.
விளையாட்டில் சாதிக்க கர்ப்பம் தடையல்ல...

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், "நான் ஐந்து மாத கர்ப்பிணி' என்று சமீபத்தில் தனது செல்பி படத்தை சமூக தளத்தில் பதிவேற்றம் செய்து.. சிறிது நேரத்திலேயே அதை நீக்கியும் விட்டார்.

அது போதாதா?
செரீனா பதிவேற்றிய புகைப்படம் வைரலாக ஊடகங்கள் முழுவதும் பரவி வருகிறது. இந்த செய்தி சமூக தளங்களில், செய்தி ஊடகங்களில் வெளிவந்ததும், "செரீனா அம்மாவாகப் போகிறார்' என்று ஒரே களேபரம்.

சமீபத்தில் செரீனா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியனாக வெற்றி பெற்றார். அப்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று அவருக்கே தெரியாதாம். கர்ப்பமாக இருக்கும்போது எப்படி விளையாடினார்... நல்லவேளை ஓடி தவ்விக் குதித்து டென்னிஸ் விளையாடியபோது அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லையே.. என்று செரீனாவின் நல விரும்பிகள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

கர்ப்பத்துடன் விளையாடி வெற்றி பெற்றவர் செரீனா மட்டும் இல்லை.

செரீனாவுக்கு முன், பல விளையாட்டு வீராங்கனைகள் வயிற்றில் கருவை சுமந்து கொண்டே பதக்கங்களை வென்றுள்ளனர்.

மலேசியாவை சேர்ந்த நுர் சுர்யானி டைபி என்ற வீராங்கனை 2012-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாடியபோது எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை அலிசியா மோன்டானோ, 2014 -ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கா டிராக் மற்றும் ஃபீல்ட் சாம்பியன்ஷிப் 800 மீட்டர் போட்டியில் கலந்து கொண்டார். குழந்தை பிறக்க ஏழு வாரங்களே உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக அலிசியா பங்கேற்றார்.

கனடாவைச் சேர்ந்த கர்லர் விளையாட்டு வீராங்கனை கிறிஸ்டி மூர் ஐந்து மாதங்கள் கர்ப்பமாக இருந்தபோது, 2010-இல் வான்கூவர் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கெடுத்து வெள்ளி பதக்கமும் வென்றார்.

இந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில், தன்னுடைய சகோதரியான வீனûஸ வென்று, செரீனா வில்லியம்ஸ் சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் வென்றிருப்பது மூலம் 23 கிரான்ட்ஸ்லாம் வெற்றிகளோடு, முன்னதாக 22 கிரான்ட்ஸ்லாம் கோப்பைகளை வென்றிருந்த ஸ்டெபி கிராஃபின் சாதனையை முறியடித்து செரீனா வரலாறு படைத்துள்ளார்.

செரீனா தன்னுடைய முதலாவது கிரான்ட்ஸ்லாம் போட்டியின் வெற்றியை 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில்தான் தொடங்கினார்.

முதல் கிரான்ட்ஸ்லாம் வென்ற அதே ஆஸ்திரேலியாவில் செரீனா இருபத்திமூன்றாவது கிரான்ட்ஸ்லாம் கோப்பையைக் கைப்பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஃபிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் தொடர்களில் செரீனா கருவுற்றிருப்பதால் விளையாட மாட்டாராம்.
உலகின் மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை பெற்றிருக்கும் செரீனா, தரவரிசை தொடர்பாக மகளிர் டென்னிஸ் குழுமத்தின் சிறப்பு விதியின்படி, குழந்தை பிறந்த பன்னிரண்டு மாதங்களுக்குள் தனது முதல் தொடரை விளையாட தயாரானால் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்வார்.

கடந்த ஆண்டின் இறுதியில் பிரபல அமெரிக்க சமூக வலைதளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடன் தனது திருமணம் நிச்சயமாகி விட்டதாக, ரெட்டிட் இணையதள பக்கத்திலேயே உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு வெளியிட் டிருந்தார்.

இந்த அறிவிப்பை செரீனா ஒரு கவிதை வடிவில் வெளிப்படுத்தி இருந்தார்.

அலெக்ஸ்ஸும் நானும் முதன் முதலில் ரோம் நகரில்தான் சந்தித்தோம். ஒரு முறை என்னை ரோம் நகருக்கு அலெக்ஸ் மீண்டும் அழைத்துச் சென்றார். ரோம் நகர் போனதும், உன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம்.. என்னை ஏற்றுக் கொள்வாயா? என்று புரபோஸ் செய்தார். நானும் சம்மதித்து விட்டேன்..
- பனுஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com