
பளிச் முக அழகிற்கு பழங்களின் மாஸ்க்..!
Published on : 19th May 2017 02:46 PM | அ+அ அ- |

முகம் பெண்களுக்கு மிக முக்கியமான ஒன்று.
எப்போதும் பளிச்சென்று இருக்கவேண்டும். முகப்பருக்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், பொலிவிழந்த முகம் போன்றவை பெண்கள் எதிர் கொள்ளும்
பிரச்னைகள். அவற்றைத் தடுக்க அற்புதமான வழிகள் இருக்கின்றன.
அவை இதோ:
வெங்காயம் தேன் கலந்தமாஸ்க்
ஒரு வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனுடன் சிறிது தேன், ஒரு தேக்கரண்டி முல்தானி மட்டி பொடியைச் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, கழுவ வேண்டும்.
ப்ளம்ஸ் மாஸ்க்
ப்ளம்ஸ் பழத்தை அரைத்து கிடைக்கும் பேஸ்ட்டுடன் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
பூண்டு கேரட் மாஸ்க்
ஒரு தேக்கரண்டி முல்தானி மட்டி பொடி, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி கேரட் ஜூஸ், சிறிய அளவில் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி பதினைந்து முதல் முப்பது நிமிடங்கள் கழித்து, நீரில் கழுவ வேண்டும்.
ஆப்பிள் மாஸ்க்
அரை ஆப்பிளை அரைத்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு முட்டையின் மஞ்சள் கரு, ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர், மூன்று தேக்கரண்டி பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி உலர்ந்த பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
பாதாம் தேன் மாஸ்க்
இரண்டு தேக்கரண்டி பாதாம் பொடியுடன், ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர், அரை தேக்கரண்டி தேன் கலந்து, முகத்தில் தடவி உலர்ந்த பின் கொஞ்சம் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டும்.
மாதுளை ஃபேஸ் பேக்
சருமத்தில் உள்ள சொரசொரப்பை நீக்கி, சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான ஃபேஸ் பேக்..
மாதுளை தோல் தான், இந்த ஃபேஸ் பேக்கில் முக்கிய பொருள். மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தை இளமையாகவும், பொலிவோடும் பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
தேவையான பொருள்கள்: மாதுளை தோல் பொடி ஒரு தேக்கரண்டி தேன் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு மூன்று துளிகள், தயிர் ஒரு தேக்கரண்டி, தக்காளிச் சாறு ஒரு தேக்கரண்டி, பால் இரண்டு தேக்கரண்டி.
மாதுளை தோல் பொடியுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் தயிர், பால், தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி இருபது நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்குவதோடு, அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரிக்கச் செய்கிறது. பளிச் முகத்திற்கு இந்த அழகு குறிப்புகளை முயற்சிக்கலாம்.