இங்கிலாந்தை "ஐ கியூ' வில் அசத்திய இந்திய வம்சாவளி மாணவி..!

விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அதிக புத்திக்கூர்மையுள்ளவராக இந்திய வம்சாவளி  மாணவிக்கு, இங்கிலாந்து  மென்சா சங்கம்  தங்கள் அமைப்பில் உறுப்பினர் ஆக அழைப்பு விடுத்துள்ளது.
இங்கிலாந்தை "ஐ கியூ' வில் அசத்திய இந்திய வம்சாவளி மாணவி..!

விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அதிக புத்திக்கூர்மையுள்ளவராக இந்திய வம்சாவளி  மாணவிக்கு, இங்கிலாந்து  மென்சா சங்கம்  தங்கள் அமைப்பில் உறுப்பினர் ஆக அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்தவர் டாக்டர் சுராஜ்குமார் பவார். இவரது மகளான ராஜ்கவுரி அல்டிரின்சம் பகுதியில் உள்ள  பள்ளியில் படித்து வருகிறார். ராஜ்கவுரிக்கு பன்னிரண்டு வயதாகிறது. 

ராஜ்கவுரி  இங்கிலாந்து  மென்சா  அமைப்பு நடத்திய "ஐ கியூ' தேர்வில் சென்ற மாதம் கலந்து கொண்டார்.

இந்த தேர்வில் ராஜ்கவுரி 162 மதிப்பெண்கள் பெற்று முன்னிலை வகித்தார். சார்பியல் கோட்பாட்டை கண்டுபிடித்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன் மற்றும் பிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ்  பெற்ற மதிப்பெண்களை விட   ராஜ்கவுரி இரண்டு மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். 

இந்த தேர்வில் அதிகபட்ச திறனளவு 140 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  ஆனால்  ராஜ்கவுரி  மிக அதிக மதிப்பெண்களைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 

இந்த ஒரு காரணத்தால், ராஜ்கவுரியை தங்கள் சங்கத்தில் சேர இங்கிலாந்து மென்சா சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். இங்கிலாந்தின்  மென்சா அமைப்பு "ஐ கியூ'  திறன்  நிர்ணயத்தில் சர்வதேசப் புகழ் பெற்ற  நிறுவனம் ஆகும்.
- அங்கவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com