ராணி எலிசபெத்

இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு சென்ற ஏப்ரல் 21-ஆம் தேதி 90 வயது நிறைவுற்று 91 வயதுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
ராணி எலிசபெத்

இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு சென்ற ஏப்ரல் 21-ஆம் தேதி 90 வயது நிறைவுற்று 91 வயதுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

அரசி ஏப்ரல் 21-இல் பிறந்தாலும், ஜூன் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமையில்தான் இவரது பிறந்த நாள் விமர்சையாகக் கொண்டாடப்படும். சென்ற 250 ஆண்டுகளாக இந்த அரச குடும்பத்தினர் உண்மையாக பிறந்த அந்த தினத்திலும், பிறகு தங்களுக்கு செளகரியமான தினத்தில் ஒரு பிறந்தநாளும் ஆக ஒரு ஆண்டில் இரண்டு பிறந்தநாள்களைக் கொண்டாடி வருகிறார்கள். அந்த மரபை இரண்டாம் எலிசபெத்தும் தொடர்கிறார்.

அரசிக்கு பிரெஞ்சு மொழி சரளமாகப் பேசவரும்.

மகாராணிக்கு 4 வயதாக இருக்கும்போது அவருக்கு முதன் முதலாக குதிரை வண்டி வசதி செய்து தரப்பட்டது.

பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியை நடத்திய இசைக் கலைஞர்கள் எலிசபெத் மகாராணிக்கு அந்த நிகழ்ச்சியின் இசையை தங்கத்தால் செய்யப்பட்ட குறுந்தகடுகளில் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

எலிசபெத் அரசி முப்பது குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அப்படி வளர்ந்த தியோடரா என்ற பெண், இன்று ஒரு பிரபல நடிகை.

மகாராணிக்கு அன்னம் என்றால் அத்தனை விருப்பமாம். அதனால் நிறைய அன்னப்பறவைகளை தனது அரண்மனையில் வளர்த்து வருகிறார்.
- பனுஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com