ஐ.ஐ.எம்.மின் முதல் பெண் இயக்குநர்!

ஐ.ஐ.எம். என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், இந்தியாவின் மிகவும் பெருமை வாய்ந்த நிர்வாகவியல் கல்வி நிறுவனங்களாக உள்ளன.
ஐ.ஐ.எம்.மின் முதல் பெண் இயக்குநர்!

ஐ.ஐ.எம். என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், இந்தியாவின் மிகவும் பெருமை வாய்ந்த நிர்வாகவியல் கல்வி நிறுவனங்களாக உள்ளன. 1961-இல் கொல்கத்தாவில் இந்தியாவின் முதல் ஐ.ஐ.எம். ஆரம்பிக்கப்பட்டது. இப்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுமாக மொத்தம் இருபது ஐ.ஐ.எம்.கள் செயல்பட்டு வருகின்றன.

துவக்க காலம் முதல், இந்திய ஐ.ஐ.எம்.களின் இயக்குநர் பதவிக்கு ஆண்களே நியமிக்கப்பட்டு வந்தனர்.  அண்மையில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண், ஐ.ஐ.எம். இயக்குநராக  நியமிக்கப்பட்டிருக்கிறார். பெயர்: டாக்டர். நீலு ரொமெத்ரா. வயது 51. இமாசலப் பிரதேசத்தில் சிர்முர் என்ற இடத்தில்  உள்ள ஐ.ஐ.எம். இன் இயக்குநராக இருந்து வருகிறார். 

பல்லாண்டுகளாகவே மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பொறியியல் மற்றும்  நிர்வாகவியல் கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பிலும், நிர்வாகக் குழுக்களிலும் ஆண்களே நிறைந்திருந்தனர். ஸ்மிதி இரானி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரானதும், இந்த நிலையை மாற்றி, அந்தக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் பெண்களை நியமனம் செய்தார். இப்போது ஒரு ஐ.ஐ.எம்.க்கு ஒரு பெண்மணியை இயக்குநராக நியமித்திருப்பது அதன் தொடர்ச்சிதான்.

நீலு ரொமெத்ரா, ஜம்மு பல்கலைக் கழகத்தில் நிர்வாகவியல் துறையின் பேராசிரியராகவும், ஜம்மு பல்கலைக் கழகத்தின் நிர்வாகவியல் பள்ளியின் இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 

இவரது திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், பிரிட்டிஷ் கவுன்சில் 2013-இல் லண்டனில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கான திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கத்துக்கு இவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தது. பல்கலைக் கழகத்துக்கு நிலம் கையகப்படுத்துவது முதல் புதிய பாடதிட்டங்களை உருவாக்குவது வரை பலவிதமான அனுபவங்களைப் பெற்றிருப்பவர் டாக்டர் நீலு. 

இந்தியாவில் உள்ள எல்லா ஐ.ஐ.எம்.களிலுமே, பெண் பேராசிரியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்த நிலைமை மாற வேண்டும். நிர்வாகவியல் துறையில் அதிக அளவில் பெண் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும், இப்போது ஐ.ஐ.எம்.களில் சேரும் மாணவர்களில் பெண்கள் 20 சதவீதம்தான் உள்ளனர். இது இன்னும் அதிகரிக்க வேண்டும். எம்.பி.ஏ. படிக்க இன்னும் அதிக அளவில் பெண்களை ஊக்குவிக்க வேண்டும்'' என்று  கூறுகிறார் டாக்டர் நீலு ரொமெத்ரா.
- ஸ்ரீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com