டிப்ஸ்... டிப்ஸ்...

வெற்றிலைக் கறை துணியில் பட்டால் அந்த இடத்தில் வினிகரை ஊற்றி  தேய்த்துக் கழுவினால் கறை மறைந்துவிடும்.
டிப்ஸ்... டிப்ஸ்...

வினிகரின் பயன்கள்!
• எவர்சில்வர் பாத்திரங்கள், காஸ் அடுப்பு, குளியலறையில் உள்ள மார்பிள் தரை,  கண்ணாடிப் பாத்திரங்கள் இவற்றை  சுத்தம் செய்ய வினிகர் பெரிதும்  
உதவுகிறது.

• வினிகர் கலந்த  நீரில் பாதங்களை மூழ்கும் வரை அரைமணி நேரம் வைத்திருந்து பிறகு கழுவினால் கால் விரல்களில் நகங்களில்  மறைந்திருக்கும் அழுக்கு வெளியாகி நகங்கள் சுத்தமாகிவிடும்.

• வெற்றிலைக் கறை துணியில் பட்டால் அந்த இடத்தில் வினிகரை ஊற்றி  தேய்த்துக் கழுவினால் கறை மறைந்துவிடும்.

• அலுமினிய குக்கரின் உட்புறம் கறுப்பாக காணப்பட்டால்  சிறிது வினிகரைத் தடவி 15 நிமிடங்கள் கழித்து சிறிது நீர் ஊற்றி கொதிக்கவிட்டால் கறை நீங்கி குக்கர் பளிச்சிடும்.

• வினிகருடன் சாக் பவுடரைக் கலந்து பூசி வாஷ் பேசினைக் கழுவினால் கறை நீங்கி வாஷ்பேசின் பளிச்சிடும்.

• ஒரு கப் தண்ணீரில்  ஒரு ஸ்பூன்  வினிகர் கலந்து ஃபிரிட்ஜைத் துடைத்தால் வாடை நீங்கி கறைகள் நீங்கி ஃபிரிட்ஜ் பளிச்சென்று ஆகிவிடும்.

• குழந்தைகளின் வெண்ணிற யூனிஃபார்ம்களை   துவைக்கும்போது இரண்டு ஸ்பூன் வினிகர் கலந்த நீரில் அலசி பிறகு நீலம் போட்டால் துணிகள் 
தும்பைப்பூவாய் மாறிவிடும்.

• பித்தளைப் பாத்திரங்களை வினிகரும் உப்பும் கலந்து தடவி  ஊற வைத்து பிறகு தேய்த்துக் கழுவினால் பளிச்சென்று ஆகிவிடும்.

• சமையலறையில் இருக்கும் அலமாரியின் தட்டுக்களை வாரம் இருமுறை வினிகர் கலந்த நீரால் துடைத்து வந்தால் பூச்சித் தொல்லைகள்  இருக்காது.

• பாத்திரங்களில் இருக்கும் ஸ்க்ரூ (screw)  துருப்பிடித்துக் கொண்டால் வினிகரை இரண்டு சொட்டுவிட்டு சிறிது நேரம் கழித்துத் திருகினால் ஸ்க்ரூ (screw) 
சுலபமாக கழண்டுவிடும்.

ஹெல்த் டிப்ஸ்!
• குழந்தை இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்து விடுகிறதா? இரவு படுக்கப்போகுமுன் எலுமிச்சைச் சாறுடன் சிறிது தேனைக் கலந்து கொடுத்தால் குழந்தை நன்றாக தூங்கிவிடும்.  சிறுநீர் கழிக்கும் பழக்கமும் மெல்ல மெல்ல  நின்றுவிடும்.

• கர்ப்பிணிப் பெண்கள் காலையில் சீக்கிரமே சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில்  உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும்; அடிக்கடி மயக்கமும் ஏற்படாது.

• மார்பக புற்றுநோய் உள்ளிட்ட  பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

• பற்களில்  ஏற்படும்  பாதிப்பு, தொண்டைக்கும்  பரவி சில சமயங்களில் இதயத்தை பாதிக்கும். எனவே பற்களை  எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

• உடல்  எடையை குறைப்பதற்காக சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது  ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு தளர்ச்சி  ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

• வெந்நீரில் குளிக்கும்போது காலிலிருந்து  ஆரம்பித்து முறையாக உடல் முழுவதும்.  கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். இறுதியாகத்தான் தலைக்கு வெந்நீர் ஊற்றிக்  கொள்ள வேண்டும். இதனால் உடலில்  ஏறும் சூடு தலையை பாதிக்காமல் இருக்கும்.

• வியர்வை தங்கிய  உடையுடனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய்த்தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

• கால்சியம் சத்து மாத்திரையைச் சாப்பிடும்போது உடன் இருப்புச்சத்து மாத்திரையை சாப்பிடக் கூடாது. அவை  ஒன்றுக்கொன்று முரணானவை.
 -  சி. ஆர். ஹரிஹரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com