ஆற்றல்மிக்க இந்தியப் பெண்கள்!

உலக அளவில் ஆற்றல் மிக்க பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை அண்மையில் வெளியிட்டுள்ளது. பட்டியலில் உலகின் ஆற்றல் மிக்கப் பெண்ணாக ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து 12-ஆவது
ஆற்றல்மிக்க இந்தியப் பெண்கள்!

உலக அளவில் ஆற்றல் மிக்க பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை அண்மையில் வெளியிட்டுள்ளது. பட்டியலில் உலகின் ஆற்றல் மிக்கப் பெண்ணாக ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து 12-ஆவது ஆண்டாகத் தேர்வாகியுள்ளார். இந்த ஆண்டு பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்காவுடன் சேர்த்து 23 பேர் புதிதாக இடம் பெற்றுள்ளனர். இவாங்காவுக்கு 19-ஆவது இடம். இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 5 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். வழக்கம்போல் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான இந்திரா நூயி முன்னணியில் இருக்கிறார். அவருக்கு பட்டியலில் 11-ஆவது இடம். இதுதவிர, ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கோச்சார் (32-ஆவது இடம்), ஹெச்டிஎல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரோஷினி நாடார் (57-ஆவது இடம்), பயோகான் நிறுவனர் கிரண் மஜூமுதார் (71-ஆவது இடம்), இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஷோபனா பார்ட்டியா (92-ஆவது இடம்), பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா (97-ஆவது இடம்) ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com