நாடகம் ஆன டிவிங்கிள் கன்னாவின் சிறுகதை

நடிகையும் எழுத்தாளருமான டிவிங்கிள் கன்னா எழுதிய "தி லெஜன்ட் ஆஃப் லட்சுமி பிரசாத்' என்ற சிறுகதை தற்போது நாடகமாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாடகம் ஆன டிவிங்கிள் கன்னாவின் சிறுகதை

நடிகையும் எழுத்தாளருமான டிவிங்கிள் கன்னா எழுதிய "தி லெஜன்ட் ஆஃப் லட்சுமி பிரசாத்' என்ற சிறுகதை தற்போது நாடகமாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஓர் இலையுதிர் காலத்தில் தன் வாழ்க்கையில் காதலைத் தேடிக் கொண்ட பெண்ணொருத்தி தன்னுடைய சுதந்திரத்தையும், பெண்ணியத்தையும் போற்றுவதற்காக எழுதப்பட்ட இந்த சிறுகதையைப் படித்த லில்லிட் துபே என்ற பெண் இயக்குநர் "சலாம் நானி துபே' என்ற பெயரில் அதை நாடகமாக அரங்கேற்றியுள்ளார். 
இந்த நாடகத்தில் தர்ஷன், ஜரிவாலா, ஜெயதி பாட்டியா, மெஹர்தார், ரிஷிகுரானா ஆகியோர் நடிக்கின்றனர்.
கடந்த ஒன்பதாண்டுகளாக நாடக நிறுவனத்தை நடத்தி வரும் லில்லிட் துபே கூறுகையில்," ஏற்கெனவே புத்தக விற்பனையில் சாதனைப் படைத்துள்ள டுவிங்கிள் கன்னாவின் சிறுகதைத் தொகுப்பு, நாடகமாக்கப்பட்ட பின் தொடர்ந்தாற்போல் ஏழு நகரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதுடன், லண்டன், சிங்கப்பூர், துபாய், ஹாங்காங், டாக்கா போன்ற நாடுகளிலிருந்தும் நாடகம் நடத்த அழைப்புகள் வந்துள்ளன. இதனால் டுவிங்கிள் கன்னாவும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் " என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com