இந்திராவின் சுற்றுச்சூழல்

ராஜீவ் காந்தி மட்டுமல்ல, இந்திரா காந்தியும் வலுக்கட்டாயமாக அரசியலில் திணிக்கப்பட்டவர்தான்! அவருடைய உண்மையான ஆர்வம் மலைகள்...
இந்திராவின் சுற்றுச்சூழல்

ராஜீவ் காந்தி மட்டுமல்ல, இந்திரா காந்தியும் வலுக்கட்டாயமாக அரசியலில் திணிக்கப்பட்டவர்தான்! அவருடைய உண்மையான ஆர்வம் மலைகள்...

மரங்கள்...காடுகள்...காட்டு விலங்குகள்... பறவைகள் மீதே இருந்தது. நகரங்களும் தொழில் முன்னேற்றங்களும் சுற்றுச்சூழலை கெடுப்பதாக அவர் உணர்ந்தார்.  அவர் உணர்ந்ததை அந்தக் காலகட்டத்தில் உலகம் உணரவில்லை.

1972-இல் தான் சுற்றுச்சூழல் கேடுகளிலிருந்து காத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உலக அளவில் உணரப்பட்டது. இந்திய அரசில் முதன்முதலில் சுற்றுச்சூழல் துறையை ஏற்படுத்தி, அதற்கு ஜெயராம் ரமேஷை அமைச்சராக நியமித்தது இந்திராதான்.

காட்டு விலங்குகள் பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பு, காற்று மாசுப்படுவதைத் தடுத்தல், காடுகளைப் பாதுகாத்தல் போன்ற விஷயங்களில் அதிக அக்கறைக் காட்டினார். மின்சார உற்பத்திக்கு தண்ணீர் மற்றும் பிற எரிபொருள்கள்  அதிக அளவில்  பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. 

இதனைத் தவிர்க்க சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட வேண்டும் என்று 1976-ஆம் ஆண்டிலேயே தொழிலதிபர் டாட்டாவுக்கு இந்திரா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இன்று சூரிய மின்சக்தி உற்பத்தியில் நாம் முன்னேற்றம் கண்டுள்ளதற்கு அவரின் தொலைநோக்குப் பார்வையும் காரணம்.
-வர்ஷினி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com