இளம் தாய்மார்கள் கவனிக்க!

தாய்ப்பாலில் குழந்தையின் பார்வைக்குத் தேவையான வைட்டமின் ஏ சத்துகள் அதிகமாக உள்ளன.

பச்சிளம் குழந்தைகள் வாரம் நவம்பர் 14-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தெரிந்து  கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:
•தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் எடை அதிகரித்து பருமனாகக் கூடாது.
•சில மருந்துகளின் தாக்கம் தாய்ப்பாலின் வழியாகக் குழந்தைக்கும் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, தாய்மார்கள் மருத்துவர்கள்ஆலோசனையின்றி  எந்த மருந்து களையும் உட்கொள்ளக் கூடாது.
•குழந்தைப் பிறந்த உடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 
•தாய்ப்பாலில் குழந்தையின் பார்வைக்குத் தேவையான வைட்டமின் ஏ சத்துகள் அதிகமாக உள்ளன.
•ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை அல்லது குழந்தையின் தேவைக்கேற்ப தாய்ப்பால் கொடுக்கலாம்.
•சரியாக பால் குடிக்கும் குழந்தைகள் நான்கு நிமிடங்களில் ஒரு மார்பகத்தில் இருந்து பாலைக் குடித்துவிடும்.
•குழந்தைப் பிறந்த முதல் மாதத்தில் 2, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை பால் குடிக்கும். அதன் பின்பு 4 மணி நேரத்துக்கு  ஒருமுறை குடிக்கும்.
•பால் கொடுத்தவுடன் குழந்தையைத் தோள் மீது போட்டு முதுகைத் தடவிக் கொடுத்தால் ஏப்பம் வந்துவிடும்.
- மங்கை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com