உணவும் மருந்தும்

பூவன் வாழைப்பழத்துடன் நாட்டுச் சர்க்கரை, பொட்டுக்கடலையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
உணவும் மருந்தும்

*பூவன் வாழைப்பழத்துடன் நாட்டுச் சர்க்கரை, பொட்டுக்கடலையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
*மாதம் ஒருமுறை பப்பாளி இலைச்சாறு சாப்பிட்டால் எந்த வியாதியும் அண்டாது.
*குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஆப்பிள் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் நின்றுவிடும்.
*வாரம் ஒருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்தால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
*தினமும் காலை வெறும் வயிற்றில் வெண்டைக்காய் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக 
இருக்கும்.
*அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்தால் சர்க்கரை நோய் மட்டுப்படும்.
*பாகற்காயின் விதைகளை அரைத்து, பசும்பாலுடன் கலந்து அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் மறையும்.
*குடிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் நொச்சிப் பூவைப் போட்டு ஊற வைத்துக் குடித்தால் ரத்த வாந்தி நிற்கும்.
*சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூளைப் போட்டு குடித்து வந்தால் நெஞ்சுச் சளி குணமாகும்.
*ஒரு தேக்கரண்டி தேனில் ஒரு சிட்டிகைக் குங்குமப்பூவைச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
- அமுதா அசோக்ராஜா, பி.பாலாஜி கணேஷ், 
ஆர்.கே.லிங்கேசன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com