இது புதுசு!

திரைப்படங்களுக்காக மட்டுமே என் வாழ்க்கையை அர்ப்பணிக்க நான் விரும்பவில்லை என்கிறார் நடிகை வித்யாபாலன்.
இது புதுசு!

குடும்பமே பிரதானம்

திரைப்படங்களுக்காக மட்டுமே என் வாழ்க்கையை அர்ப்பணிக்க நான் விரும்பவில்லை என்கிறார் நடிகை வித்யாபாலன். இது குறித்து அவர் கூறுகையில், "திரைப்படங்களைத் தாண்டி எனக்கு வாழ்க்கை இருக்கிறது. படப்பிடிப்பு இல்லாத நாள்களில் என் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க விரும்புகிறேன். அதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூட நான் வெளியே செல்வதில்லை" என்கிறார் வித்யா பாலன்.

அடுத்தகட்ட பணி!

சூப்பர் ஹீரோ படங்களில் நடிப்பதாக இருந்தால் ஹீரோ, வில்லன் இதில் எது உங்கள் தேர்வாக இருக்கும் என்ற ரசிகரின் கேள்விக்கு, "வில்லன்களுக்கும் கூறுவதற்கு நிறைய கதை இருக்கிறது என்று கருதுகிறேன்' என்று தெரிவித்துள்ளார் நடிகை சோனம் கபூர். மற்றொரு ரசிகர், "உங்களின் மிக நெருங்கிய தோழி கரீனா கபூரை இன்ஸ்டாகிராமில் சேரச் சொல்ல முடியுமா' என்று கேட்டதற்கு, "நம்புங்கள்! எனக்கான அடுத்தகட்டப் பணிகளில் இதுவும் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

"பத்மாவதி' சர்ச்சை

சஞ்சய் லீலா பன்சாலியின் "பத்மாவதி' என்ற காவியத் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. தற்போது படத்தில் வரலாற்று உண்மைகள் சிதைக்கப்பட்டுள்ளதாக ஜெய்பூர் முன்னாள் அரசக் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குடும்பத்தின் முன்னாள் இளவரசியும், பாஜக எம்.எல்.ஏ.வுமான தியா குமாரி, ""எந்தத் திரைப்படமும் வரலாற்று உண்மைகளைத் திரித்துக் கூறி ஒரு சமூகத்தின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.

 
உடற்பயிற்சி வெறுப்பு!

நடிகை சோனாக்ஷி சின்ஹா திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கியபோது அவரின் எடை 90 கிலோ. அழகாக இருந்தாலும் ஒரு கதாநாயகிக்கான தோற்றம் இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. நடிகர் சல்மான்கான் தான் அவருக்கு உடல் எடையைக் குறைப்பதற்கான அறிவுரைகளை வழங்கினார். தற்போது மெலிந்த உடலுடன் காணப்படும் சோனாக்ஷி ""உடல் எடையைக் குறைப்பதற்கான என்னுடைய பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. உடற்பயிற்சி மையத்துக்குச் செல்வதை இப்போதும் நான் வெறுக்கிறேன்'' என்கிறார்.

ரகசியக் கொண்டாட்டம்

நியூயார்க்கில் மன்ஹாட்டன் என்ற பகுதியில் நான்கு படுக்கையறைகள் கொண்ட உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கியுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது அங்குதான் வசித்து வருகிறார். டிசம்பர் மாத இறுதியில் குடும்பத்தினருடனும் நெருங்கிய நண்பர்களுடனும் பொழுதைப் போக்க குறுகிய கால விடுமுறைக்காக இந்தியா வரவுள்ளாராம். இவர்களுடன் 2018-ஆம் ஆண்டு புத்தாண்டை ஒரு ரகசிய இடத்தில் கொண்டாடவும் திட்டமிட்டுள்ளாராம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com