டிப்ஸ்... டிப்ஸ்...

நெல்லிக்காய்களை வேக வைத்து, கொட்டைகளை நீக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்து அதை  வடகம் மாவில் சேர்த்து வடகம் செய்தால் வித்தியாசமான சுவையில் சத்தான வடகம்  ரெடி.

• நெல்லிக்காய்களை வேக வைத்து, கொட்டைகளை நீக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்து அதை  வடகம் மாவில் சேர்த்து வடகம் செய்தால் வித்தியாசமான சுவையில் சத்தான வடகம்  ரெடி.

• வடைக்கு அரைத்த மாவை சிறிது நேரம்  ஃப்ரிட்ஜில் வைத்து, பிறகு வடை செய்தால்  மொறு மொறு வடை கிடைக்கும்.

• கோதுமை மாவுடன் ஒரு தேக்கரண்டி கார்ன்ஃப்ளார் மாவு , ஒரு தேக்கரண்டி பாம்பே ரவை, ஒரு தேக்கரண்டி எண்ணெய்ச் சேர்த்துப் பிசைந்து ஊற வைக்காமல்  உடனே பூரி  செய்தால் பூரி உப்பலாக, மொறு மொறுப்பாகவும் இருக்கும்.

• மோர்க்குழம்புக்கு அரைக்கும்போது சீரகத்துடன் ஒரு தேக்கரண்டி ஓமத்தையும் சேர்த்து அரைத்துச் செய்தால் மோர்க் குழம்பு சூப்பராக இருக்கும்.

• பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளை எண்ணெய்யில் பொரித்து, அதை மோர்க் குழம்பில் போட்டு மோர்க்குழம்பு செய்தால் அசத்தலாக இருக்கும்.
-  எம்.ஏ.நிவேதா

• பால் திரிந்துவிட்டால்  கீழே கொட்டாமல் அப்படியே ஆற வைத்து, தயிரில் ஊற்றினால் உண்பதற்கு ருசியாக இருக்கும்.

• தோசை மொறு மொறுப்பாக இருக்க சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து மாவுடன் சேர்த்து அரைக்க வேண்டும்.
 ரசம் மீந்துவிட்டால் துவரம் பருப்பை வேக வைத்து மசித்து ரசத்துடன் சேர்த்தால் சுவையான சாம்பாராக ஆகிவிடும். 
  -  எல்.நஞ்சன்

நடந்தது என்ன?
நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி கிளின்டன், எதிர்பாராமல், டொனால்ட் டிராம்பிடம்  தோற்றுப் போனார்.
இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ஆரம்பத்திலிருந்து, இறுதி வரை அவர் சந்தித்த சவால்கள், கிண்டல்கள்..
எல்லாவற்றையும் நகைச்சுவையாகவும்,  கபடமற்ற பேச்சுகளை உள்ளது  உள்ளபடியும் நூலாகத் தொகுத்து "WHAT HAPPENED’(நடந்தது என்ன?) என்ற பெயரில் தயார் செய்து வருகிறார். விரைவில் அது வெளிவரவிருக்கிறது.
 - ராஜிராதா
ஜப்பானில் நாவலாசிரியை கியோ ஷீ குச்சி - 5000 யென் வங்கி நோட்டில் இடம் பெறுகிறார். ஒரு வங்கி பண நோட்டில்  இடம் பெறும் முதல்  பெண் எழுத்தாளர் இவரே.
- மோ. அஞ்சலா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com