இந்தியாவின் மிக நீளமான ஃபோட்டோ கேக்!

இந்தியாவின் மிகப்பெரிய பேக்கரி மற்றும் கன்ஃபெக்ஷனரி சங்கிலித்தொடர் நிறுவனமாகத் திகழும் தி ஃபிரெஞ்ச் லோஃப், தொடர்ந்து
இந்தியாவின் மிக நீளமான ஃபோட்டோ கேக்!

இந்தியாவின் மிகப்பெரிய பேக்கரி மற்றும் கன்ஃபெக்ஷனரி சங்கிலித்தொடர் நிறுவனமாகத் திகழும் தி ஃபிரெஞ்ச் லோஃப், தொடர்ந்து 7ஆவது ஆண்டாக, நாட்டின் மிக நீளமான போட்டோ கேக்கை உருவாக்கி அதன் மூலம் தனது படைப்பாற்றலையும், செயல்திறனையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. 

சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த மிக நீளமான கேக் தயாரிப்பு நிகழ்வானது, சென்னையைச் சேர்ந்த பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கான முயற்சியாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது. 

ஓரியண்டல் குசீன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான எம். மகாதேவன், அதன் தலைமைசெயல் அலுவலர் ரெனால்டு ஃபெர்னான்டஸ், இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினரான சுஹாசினி மணிரத்னம் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ், அனுஹாசன் மற்றும் பல பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கெளரவித்தனர். 

தி பிரெஞ்ச் லோஃப் ரூ லீ சாக்கலேட்டியரின் தலைமை செஃப் பூபேஷ் கூறுகையில், 
"இந்த பிரம்மாண்டமான கேக்கை உருவாக்குவதற்கு மொத்தம் 560 கிகி சாக்லேட் கலவை, 150 கிகி ஃபிரெஷ் கிரீம், 352 கிகி டார்க் சாக்லேட், 100 கிகி ஒயிட் சாக்லேட், 100 கிகி கோல்டு கிளேஸ் ஜெல் மற்றும் 1000 சுகர் ஐஸிங் சீட்கள் பயன்படுத்தப்பட்டன. 

1000 கிகி எடையுடன் 100 மீட்டர் நீளம் உள்ளது இந்த கேக். சினிமாவில் சிறப்பான பங்களிப்பு வழங்கிய 1000 பெண்களின் உருவங்களை கேக்கினாலேயே போட்டோக்களைப் போல உருவாக்கியிருக்கார்கள். 

14 செஃப்கள் இந்த மாபெரும் கேக்கை உருவாக்குவதிலும் மற்றும் அவற்றை ஒருங்கிணைத்து அழகூட்டுவதிலும் பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர். 

இந்த ஃபோட்டோ கேக்கை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகை, சென்னையைச் சேர்ந்த டேங்கர் ஃபவுண்டேஷன், ஜீவன் ஸ்டெம்செல் ஃபவுண்டேஷன், நாம் ஃபவுண்டேஷன் ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்'' என்றார்.
- ஸ்ரீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com