கை வைத்தியம்!

கை வைத்தியம்!

அடிபட்ட இடத்தில் மேல்பற்றாக வெட்சி செடியின் இலையைப் அரைத்துப் பற்றுப் போடும்போது புண்கள் விரைவில் ஆறிப்போகும்.

டிப்ஸ்... டிப்ஸ்...
• பப்பாளி காயைக் கூட்டு சமைத்து உண்டு வந்தால் உடல் எடை குறையும்.

• பீட்ரூட் அடிக்கடி உணவில் சேர்த்து வர உடலில் இரத்தத்தைப் பெருக்கும்.

• தர்ப்பைப் புல் கஷாயம் பருகி வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

• அத்திப்பழம் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.
- கே.முத்தூஸ்

வெட்சிப் பூ மருத்துவம்!
• கொப்புளங்கள், அரிப்பு, தடிப்பு போன்ற தோல் நோய்களை சரிசெய்ய வெட்சி செடியின் இலைகளை அரைத்து பற்றுப்போட்டு வந்தால் விரைவில் 
குணமாகும். 

• அடிபட்ட இடத்தில் மேல்பற்றாக வெட்சி செடியின் இலையைப் அரைத்துப் பற்றுப் போடும்போது புண்கள் விரைவில் ஆறிப்போகும்.

• வெட்சி இலை இரண்டை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து குடித்து வர சளியை கரைத்து வெளியேற்றும். வயிற்றுப்போக்கை நிறுத்தும். 

• ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நீர்விடாமல் அரைத்த வெட்சிப் பூவை சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை வடிகட்டி பூசி வர தோல்நோய்கள் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். தலையில் தேய்த்து குளித்துவர பொடுகை தடுக்கிறது.

• வெட்சிப்பூ தேநீரை காலை, மாலை இருவேளை அருந்தி வர உடல் சோர்வு, காய்ச்சல், கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை குணமாக்கும்.

• வெட்சிப் பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். புற்றுநோய் வராமல் தடுக்கும். 
- என். சண்முகம்

• சப்பாத்தி காய்ந்து போனால் அதில் சிறிது தண்ணீர் தெளித்து பத்து விநாடி மைக்ரோவேவ் அவனில் வைத்துச் சூடாக்கினால் சப்பாத்தி சாஃப்ட்டாகி விடும்.

• அடைக்கு ஊற வைக்கும் போது பயத்தம்பருப்பு, ஜவ்வரிசி ஊற வைத்து அரைத்தால் அடை மொறுமொறுப்புடன் சுவையாகவும் இருக்கும்.

• தோசை மாவை இரண்டே மணி நேரத்தில் புளிக்கச் செய்து தோசை வார்க்க, மாவில் மிளகாய் வற்றல் காம்புகளைப் போட்டு விட்டால் மாவு புளித்து , தோசையும் நன்றாக வரும்.

• பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு கேரட்டையும் சேர்த்துப் போட்டால், குழம்பில் கசப்பு தெரியாது. சுவையும் கூடுதலாக இருக்கும்.

• கடுகை வாங்கியவுடன் லேசாக வறுத்து, ஆறிய பிறகு டப்பாவில் போட்டு மூடி வைத்து, தேவையான பிறகு எடுத்து தாளிதம் செய்யும்போது கடுகு வெடிக்காது.

• சாம்பார் பொடி அரைக்கும்போது ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் பொடியில் பூச்சி, வண்டுகள் அண்டாது.
- எம்.ஏ.நிவேதா

• முருங்கை பிஞ்சுகளை நறுக்கி ரசத்தில் போட்டு கொதிக்க விட்டால். ரசம் மிகவும் ருசியாக இருக்கும்.

• கீரையைச் சமைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தால் அதன் மனம் மாறாமல் இருக்கும்.

• சப்பாத்தி மாவில் நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஒன்று சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும். சுவையும் கூடுதலாக 
இருக்கும்.

• முட்டைகோஸ் கூட்டு வைக்கும்போது அதில் சிறிதளவு இஞ்சி சேர்த்தால் சுவை அதிகரிக்கும். வாயுத் தொல்லையும் இருக்காது.

• ரவை உப்புமா செய்யும்போது ஒரு முட்டை சேர்த்து செய்தால் மெதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

• பாயசம் செய்யும்போது சேமியாவை பாலிலே வேகவைத்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
- எல். நஞ்சன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com