டாக்டரைக் கேளுங்கள்: மகளிர் சிறப்பு மகப்பேறு  மருத்துவர் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை டாக்டர். நித்யா ராமமூர்த்தி பதிலளிக்கிறார்.

10 வயதில் உள்ள சிறுமி பூப்பெய்துகிற (வயதுக்கு வருகிற) வாய்ப்பு இருப்பதால்,இக்காலகட்டத்தில் எலும்புகள் விரைவாக வளர்ச்சியடையும்
டாக்டரைக் கேளுங்கள்: மகளிர் சிறப்பு மகப்பேறு  மருத்துவர் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை டாக்டர். நித்யா ராமமூர்த்தி பதிலளிக்கிறார்.

டாக்டர், என் மகள் வயது பத்து. ஆனால், வயதுக்கு மீறிய வளர்ச்சியாக மிக உயரமாக இருக்கிறாள். இதனால் ஏதும் பாதிப்பு ஏற்படுமா?
- செங்கம்மாள், புதுச்சேரி.
10 வயதில் உள்ள சிறுமி பூப்பெய்துகிற (வயதுக்கு வருகிற) வாய்ப்பு இருப்பதால்,இக்காலகட்டத்தில் எலும்புகள் விரைவாக வளர்ச்சியடையும். உங்களது மகள் 2}லிருந்து 3 ஆண்டுகளுக்குள் பூப்பெய்துவாள் என்பதையே இவ்வளர்ச்சி சுட்டிக் காட் டுகிறது. இத்தகைய வளர்ச்சி மிகவும் இயல்பான ஒன்று. அதுகுறித்து சிறிதும் கவலைப்பட வேண்டிய அவசிய மில்லை. 

எங்கள் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. பிறந்தபோது 3கிலோ இருந்த எடை அப்படியே உள்ளது. கொஞ்சமும் கூடவோ, குறையவோ இல்லை. இது எதனால்?
- ரமணி, பெருங்களத்தூர்.
3 மணி நேரங்களுக்கு ஒரு முறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது உடல் எடை கூடுவதற்கு உதவும். தாய்ப்பால் போது மான அளவு இல்லையென்றால் குழந்தை நல மருத்துவரின் முறையான ஆலோசனை பெற்று பசும்பால் அல்லது ஃபார்மு லா  பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். அடிப்படையாக, தாய்ப்பால் குறைவாக புகட்டுவது குழந்தையின் உடல் எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

48 வயதாகிறது. ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய் இருக்கிறது. கடந்த மாதம் வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் வீக்கம் ஏற்பட்டு சீழ் வைத்துக் கொண்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பின், புண் ஆறிவிட்டாலும், நீர் வடிந்து கொண்டே இருக்கிறது.
மருத்துவ பரிசோதனையில் காசநோய் தாக்கியுள்ளதாக கூறுகிறார்கள். இதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா?
- எம். சக்கீனா, திண்டுக்கல். 
முதலில் சிகிச்சை மூலம் உங்களது காசநோயைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். அடுத்ததாக, நீங்கள் செய்ய வேண்டியது, முறையாக தவறாது மருந்துகளை எடுத்துக்கொள்வது மற்றும் உகந்த உணவுப்பழக்கவழக்கங்களின் மூலம் உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது.

எனது மகள் வயது பதினாறு ஆகியும் இன்னும் வயதுக்கு வராமல் இருக்கிறாள். இதற்கு என்ன சிகிச்சைகள் மேற் கொள்ள வேண்டும்?
- விஜயா, பரவாக்கோட்டை
முதலில் உங்கள் மகளை, மகளிர் நல மருத்துவரிடம் நீங்கள் அழைத்துச் சென்று, மார்பகம், கருப்பை, முட்டையக வளர்ச்சி ஆகியவற்றை பரிசோதிக்குமாறு செய்ய வேண்டும். அத்துடன் அவளுக்கு இரத்தசோகை மற்றும் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்றும் சோதிக்க வேண்டும். இச்சோதனை முடிவுகள் அடிப்படையில் மேலதிக சிகிச்சையை செய்யலாம். 

பெண்கள் கைகளுக்கு மருதாணி இடுவது கண்களுக்கு மை வைப்பது அழகுக்காகவா?  மருத்துவ ரீதியாக இதனால் என்ன நன்மை?
- வரலட்சுமி, திண்டுக்கல்
மெஹந்தி எனப்படும் மருதாணி பொதுவாக குளிர்ச்சி தரக்கூடியது. காஜல் எனப்படும் கண் மை இடுவது வெறும் தோற்ற மேம்பாட்டுக்காக மட்டுமே.  மருதாணி மற்றும் மை இடுவதால், அழகூட்டும் அம்சங்களை தவிர்த்து எந்த மருத்துவப் பயனும் இல்லை.  
 
- ஸ்ரீதேவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com