"ஸ்டார் ஆஃப் இந்தியா' விருது பெற்ற தென்னிந்திய வீராங்கனை!

கர்நாடக மாநிலம் சிவமோகா அடுத்துள்ள சிக்காரிபுராவில் 63ஆவது தேசிய அளவிலான  ஜூனியர்  பூப்பந்தாட்டப் பட்டயப் போட்டிகள் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற்றது.
"ஸ்டார் ஆஃப் இந்தியா' விருது பெற்ற தென்னிந்திய வீராங்கனை!

கர்நாடக மாநிலம் சிவமோகா அடுத்துள்ள சிக்காரிபுராவில் 63ஆவது தேசிய அளவிலான ஜூனியர் பூப்பந்தாட்டப் பட்டயப் போட்டிகள் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற்றது. இதில், தமிழக பெண்கள் அணியினர் ஐவர் மற்றும் இரட்டையர் போட்டியில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். இவ்விரு அணிகளிலும் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் பி.டெக் படித்து வரும் மாணவி கே.பவித்ரா கலந்து கொண்டு, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இத்தொடரில் பவித்ராவின் ஒட்டு மொத்த செயல்பாடுகள், ஆட்ட நுணுக்கம் உள்ளிட்டவை மூலம் அவருக்கு ஸ்டார் ஆஃப் இந்தியா' விருது கிடைத்துள்ளது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின், தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஜூனியர் பிரிவில் ஸ்டார் ஆஃப் இந்தியா' விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக ரைட் பிரண்ட்' நிலையில் (பொசிஷன்) ஆடும் ஒருவருக்கு இவ்விருது கிடைப்பது கடினம்' என்கிறார் பூப்பந்தாட்ட பயிற்சியாளர் விஜய்.

மேலும் அவருக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால் ஊக்கம் அடைந்த பவித்ரா, மேல்நிலை வகுப்புகளின்போது பூப்பந்தாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு, விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் பி.டெக்கில் சேர்ந்து, தற்போது 3 ஆம் ஆண்டு மாணவியாக பயின்று வருகிறார்.

அண்ணா பல்கலைக்கழகம் அணிக்காக 2 முறை விளையாடியுள்ள பவித்ரா, கடந்த 2017 பிப்ரவரி மாதம் கர்நாடக மாநிலம் மங்களூர் அடுத்துள்ள மங்கலகங்கோத்ரியில் நடைபெற்ற சீனியர் பூப்பந்தாட்டப் போட்டியில் இந்திய பல்கலைக்கழகம் அணிக்காக விளையாடும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார். இந்த சிறப்பை பெறும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த முதல் மாணவி பவித்ராதான்.

பவித்ரா படிப்பது திண்டுக்கல்லாக இருந்தாலும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மதுரை சின்ன சொக்கிக்குளம் பகுதியைச் சேர்ந்த பவித்ராவின் தந்தை ஆர்.கண்ணன், தாயார் முத்துமாரி ஆகியோர் அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகின்றனர். ஓ.சி.பி.எம் பள்ளி மாணவியான பவித்ரா, 6 ஆம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே பூப்பந்தாட்டத்தில் ஆர்வம்காட்டி வருகிறார்.
- ஆ.நங்கையார்மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com