டிப்ஸ்... டிப்ஸ்...

சர்.ஜான் மார்ஷல்  "மொகஞ்சதாரோ சிந்து நாகரிகம்'  என்னும் நூலில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மேல் நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து
டிப்ஸ்... டிப்ஸ்...

பருத்திப் பெண்டிர் 
சர்.ஜான் மார்ஷல்  "மொகஞ்சதாரோ சிந்து நாகரிகம்'  என்னும் நூலில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மேல் நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து துணி ஏற்றுமதியானதென்று கூறியிருகிறார். அக்கால இந்தியா என்பது தமிழகமே. நூல் நூற்கும் பெண்களை புறநானூறு  பருத்திப் பெண்டிர் எனச் சிறப்பிக்கின்றது.

முதல் பெண்மணி!
ஈராக்கைச் சேர்ந்த ஜஹாஹீதத் என்பவர்தான் உலகிலேயே கட்டடக்கலைக்கான  "பிரிட்ஸ் கெர்'  பரிசை முதன்முறையாக பெற்ற பெண்மணி.

மெட்டி!
கல்யாணம் ஆனதும் பெண்கள் கால் கட்டைவிரலுக்கு அடுத்த விரலில் மெட்டி அணிவது வழக்கத்தில் உள்ளது. அந்த விரலில் மட்டும் மெட்டி அணிய வேண்டும் என்று பெரியோர் சொல்ல காரணம் உண்டு. அந்த விரலில் தான் கருப்பையின் நரம்பு முடிச்சுகள் வந்து முடிகின்றன. பெண்கள் மெட்டி அணிந்து நடக்கும்போது ஏற்படும் அழுத்தம் கருப்பைக்கு பெரிதும் உதவுகின்றது. இதன் காரணமாகத்தான் பெண்களுக்கு திருமணத்தின் போது மெட்டி அணிவிக்கின்றனர். இதை போன்றே  இதயம் முதல் மூளை நரம்புகள் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். தவிர கல்யாணமான பெண் என்பதை அடையாளம் கண்டு கொள்ளவும்  உதவுகிறது.
- சி.ரகுபதி

குக்கர் பராமரிப்பு
* குக்கரைக் கவிழ்த்துப் போட்டுத் தேய்க்கக் கூடாது. அப்படித் தேய்த்தால் மேல்பகுதி தரையில் உராயும்போது காஸ்கட் வளையம் விரிந்து விடும். 

* குக்கரில் காஸ்கட் தளர்ந்து போய்விட்டால் பிரிஜ்ஜில் ஒருநாள் வைத்திருந்து பிறகு போட்டுப்பார்த்தால் சரியாக இருக்கும்.

* குக்கரின் அடியில் பழுப்பு நிறம் சேர்ந்துவிட்டால் அதை எலுமிச்சைத் தோலால் தேய்த்துவிட்டு பிறகு காலி மாத்திரை அட்டைகளால்  தேய்த்தால் மிகவும்  பளிச்சென்று ஆகிவிடும்.

வாங்க சாப்பிடலாம்!
* இரத்த   சோகைக்கு கேரட், பீட்ரூட், முட்டை கோஸ் மற்றும் தக்காளி சாப்பிடலாம்.

* ஆஸ்துமாவுக்கு தேன், கேரட், அன்னாசிப்பழம் உண்ணலாம்.

* நீரிழிவுக்கு முளைவிட்ட சிறுதானியங்கள், பீன்ஸ்,  பாகற்காய், வெள்ளரி சாப்பிடலாம்.

* வயிற்றுப்புண்ணுக்கு கேரட் மற்றும் பூசணி சாப்பிடலாம்.

* இதய நோய்க்கு ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசிப்பழம், மாதுளை சாப்பிடலாம்.

* கொழுப்பு குறைய கொள்ளு மற்றும் கேரட் நிறைய சாப்பிடலாம்.

* சளித் தொல்லைக்கு  துளசி இலைச்சாறு, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச்சாறு சாப்பிடலாம்.

* முருங்கைப் பூவை பருப்புடன் சமைத்து உண்ண வாய் கசப்பு குணமாகும்.

* புளியந்தளிரை துவையலாக்கி உண்ண வயிற்று  மந்தம் தீரும்.

* பிரண்டைத் துவையல் செரியாமையை நீக்கி  பசியைத் தூண்டும்.

* நாள்தோறும் ஒரு பப்பாளித் துண்டு சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.
"என்ன சாப்பிடலாம் ?'  என்ற நூலிலிருந்து
நெ.இராமன்

மகிழம்பூ
மகிழ மரத்தின் பட்டை, மலர்கள் கனிகள், விதைகள் மருத்துவப் பயனுடையவை. மலர்களைக் காயவைத்துப் பொடியாக்கி மூக்குப் பொடி போல் பயன்படுத்த அதிக அளவு நீர் வெளியேறி தலைப்பாரம் மற்றும் தலைவலி நீங்கும்.

மந்தாரை
 மந்தாரை பூ மொக்குகள் ஐம்பது கிராம் எடுத்து 500 மி.லி நீரில் இட்டு காய்ச்சி 200 மி.லி. ஆனவுடன் காலை, மாலை இருவேளை அருந்தி வர ரத்தமூலம், சிறுநீரில் ரத்தப்போக்கு, மூக்கில் ரத்தம் வடிதல், சீதபேதி ஆகிய நோய்கள் குணமாகும். மந்தாரைப் பூவை உலர்த்திப் பொடி செய்து இரண்டு சிட்டிகை எடுத்து தேனுடன் உட்கொள்ள மலச்சிக்கல் குணமாகும்.
- கே.பிரபாவதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com