விருது பெற்றும் பாராட்டு இல்லை! -பிரசாந்தி சிங் ஆதங்கம்

பெருமைக்குரிய நேஷனல் சாம்பியன்ஷிப் மற்றும் ஃபெடரேஷன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை பெற்றுள்ள
விருது பெற்றும் பாராட்டு இல்லை! -பிரசாந்தி சிங் ஆதங்கம்

பெருமைக்குரிய நேஷனல் சாம்பியன்ஷிப் மற்றும் ஃபெடரேஷன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை பெற்றுள்ள பிரசாந்தி சிங், கடந்த ஆகஸ்ட் 29 -ஆம் தேதி ஜனாதிபதி கையால் கூடைப்பந்து விளையாட்டில் சிறந்த வீராங்கனைக்கான  அர்ஜுனா விருது பெற்றார். 

இதற்காக பாஸ்கட்பால் ஃபெடரேஷன் முன்னாள் தலைவர். ஆர்.எஸ்.கில் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்த போதிலும், பாஸ்கட்பால் ஃபெடரேஷன் உறுப்பினர்கள் யாருமே இதுவரை அவருக்கு வாழ்த்து  தெரிவிக்கவில்லையாம்.

பிரசாந்தி சிங்கை பொருத்தவரை 2006-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக இந்தியாவிலிருந்து அனுப்பட்ட தேசிய விளையாட்டு குழுவில் இடம்பெற்ற ஒரே பெண் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை என்பதும், இதே போன்று 2010-ஆம்  மற்றும் 2014- ஆம் ஆண்டுகளில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் அனுப்பப்ட்டது தெரிய வந்துள்ளது. இதுவரை நேஷனல் சாம்பியன்ஷிப் மற்றும் ஃபெடரேஷன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 22 பதக்கங்களையும் பெற்றுள்ளார். இருப்பினும் அண்மையில் அர்ஜுனா  விருது பெற்றபோது, பாஸ்கட்பால் ஃபெடரேஷன் வாழ்த்து தெரிவிக்காதது அவருக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் என்ன சொல்கிறார்:

கடந்த சில ஆண்டுகளாக பாஸ்கட்பால் ஃபெடரேஷன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் அர்ஜூனா விருது பெற விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 30 என்பதால், நானே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா மூலம் அனுப்பி வைத்தேன். ஜூலை மாதம் முதல் பாஸ்கட்பால் ஃபெடரேஷனுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனால் சிலருக்கு என் மீது கோபம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது நான் பணிந்துபோகாதது ஆத்திரத்தை கிளப்பியிருக்கலாம்.

இப்படி புறக்கணிக்கப்படுவது எனக்கு புதிதல்ல. 2002-ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக மகாநகர் டெலிபோன் நிகாம் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இந்த நாட்டின் சார்பாக விளையாடி வெற்றி பெறும் வீரர்களுக்கு மற்ற நிறுவனங்களில் அளிக்கும் கவுரவமோ, பதவி உயர்வோ இதுவரை எனக்கு கிடைத்ததில்லை. அரசு துறைகளில் பணிபுரியும் விளையாட்டு வீரர்கள் இதுபோன்று பதவி உயர்வு அளிக்காமல் புறக்கணிக்கப்படுவதும் தெரிய வந்துள்ளது'' என்றார் பிரசாந்தி சிங்.
 - அ.குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com