பட்டுச் சேலை அணிவகுப்பு! 

ஒவ்வொரு பெண்ணும் வாழ்வின் மறக்கமுடியாத தருணங்களில் அணியக்கூடிய ஆடையாக பட்டு சேலை உள்ளது. 
பட்டுச் சேலை அணிவகுப்பு! 

ஒவ்வொரு பெண்ணும் வாழ்வின் மறக்கமுடியாத தருணங்களில் அணியக்கூடிய ஆடையாக பட்டு சேலை உள்ளது. 

இவ்வளவு சிறப்புமிக்க  அந்த பட்டுப் புடவைகளின்  பாரம்பரியத்தை உணர்ந்து நவீன தொழில்நுட்பங்களுடன், இன்றைய தலைமுறை இளம்பெண்களுக்கு ஏற்றவகையில் புதியரக பட்டுப் புடவைகளை  அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்குகிறது ஸ்ரீ பாலம் சில்க்.

தற்போது,  "ஸ்வதந்த்ரா'   என்ற வண்ணமிகு ஆடை அலங்கார அணிவகுப்பை சென்னை ஜி.ஆர்.டி கன்வென்ஷன் ஹாலில் நடத்தியது.    வண்ணமிகு புடவைகளை அணிந்தபடி மேடையில் மங்கைகள் நடந்து வந்தனர்.   இந்த ஆடை அலங்கார அணிவகுப்பில் 4 புதுரக பட்டுப்புடவைகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். 

இதுகுறித்து ஸ்ரீ பாலம் சில்க்ஸ்  நிறுவனர் ஜெயஸ்ரீ ரவி கூறுகையில்:    
இந்த தீபாவளியை முன்னிட்டு "ஸ்வதந்தரா'  என்ற பெயரில்  ஸ்ரீபாலம் சில்க் நிறுவனத்தின்  தேர்ந்த கலைஞர்களால்   உருவான  மிளிரும் வண்ணத்தில்   அன்னப் பறவையின் துகில் போன்று எடை குறைவான  புடவைகளான கார்ப்ரேட் கலெக்ஷன், மேக்னா கலெக்ஷன்,  ஸ்பெக்ட்ரா  கலெக்ஷன், விஸ்டா கலெக்ஷன்  என நான்கு வகை பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்துள்ளோம்.  

பொதுவாக விசேஷங்களுக்கு செல்லும் போதுதான்  பெண்கள் பட்டுப்புடவை அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் இந்த சேலைகள்.    வெளியிடங்களுக்குச் செல்லும்போது, அலுவலகம் செல்லும்போது கூட அணியும் வகையில் இந்த ஸ்வதந்த்ரா பட்டுச் சேலைகள் நிச்சயம் இருக்கும்'' என்றார். 
 - ரிஷி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com