டாக்டரைக் கேளுங்கள்: மகளிர் சிறப்பு மகப்பேறு மருத்துவர். டாக்டர் எழிலரசி பிரசன்னா பதிலளிக்கிறார்

நான் முன்பே கூறியதுபோல், உதிரப்போக்கிற்கான காரணம் எதுவோ, அதற்கு சிகிச்சையளிக்க வேண்டும். பரிசோதனைகள் அனைத்தும் செய்துவிட்ட நிலையில்
டாக்டரைக் கேளுங்கள்: மகளிர் சிறப்பு மகப்பேறு மருத்துவர். டாக்டர் எழிலரசி பிரசன்னா பதிலளிக்கிறார்

மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கிற்கு,  கருப்பை நீக்கம் தவிர்த்து வேறெதுவும் சிகிச்சை முறைகள் உள்ளனவா? அதுபற்றிக் கூறமுடியுமா? 
-வைஷாலி, கும்பகோணம்.
நான் முன்பே கூறியதுபோல், உதிரப்போக்கிற்கான காரணம் எதுவோ, அதற்கு சிகிச்சையளிக்க வேண்டும். பரிசோதனைகள் அனைத்தும் செய்துவிட்ட நிலையில், கருப்பை கட்டிகள், வீக்கம், சினைப்பை கட்டிகள், உள்சுவர் தடிமன் இவை ஏதேனும் இருக்கின்றதா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். எந்த வகை சிகிச்சை முறையாக இருந்தாலும், ENDOMETRIAL BIOPSY அவசியம் செய்து கருப்பை புற்று நோய்க்கான ஆரம்ப அறிகுறி இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகு, உதிரப்போக்கை நிறுத்தக்கூடிய சாதாரண மாத்திரைகள் முதல் ஹார்மோன் மாத்திரைகள் வரை பல வகை உள்ளன. இவை ஊசியாகவும் கிடைக்கின்றன. உங்களுக்கு ஏற்ற சிகிச்சை முறையை மருத்துவர் பரிந்துரைப்பார். இதுமட்டுமல்லாது, தற்போது காப்பர் - டி போன்று கருப்பையில் பொருத்தக்கூடிய ஹார்மோன் டிவைஸ்கள் உள்ளன. இவை அறுவை சிகிச்சைக்கு நல்ல மாற்றாக அமையும்.
-தொகுப்பு: ரவி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com